மேலும் அறிய

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு; மேலும் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முகமது அசாருதீன் மற்றும் முகமது இட்ரிஸ் ஆகியோர் மீது என்.ஐ.ஏ. துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேசா முபின் ஐ.எஸ்..எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்... தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை என்... அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ், இலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள சிறையில் இருந்த அசாரூதின், போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த தாஹா நசீர் (27) ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை இவ்வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் மீது நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் முகமது அசாருதீன் மற்றும் முகமது இட்ரிஸ் ஆகியோர் மீது நேற்று என்... துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், அசாருதீன் சிறையில் இருந்த போது, தன்னை சந்தித்த மூன்று பேரை சதி திட்டத்தில் ஈடுபட தூண்டியதாகவும், இதனால் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட உமர் பாரூக் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அமீராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், பொது நிர்வாகம், காவல் துறை, நீதித்துறை போன்றவற்றை குறி வைத்து தாக்க திட்டமிட்டதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"கோவை தேர்தல் ரேஸ் தொடக்கம்" – ஒரே நாளில் 27 பேர் மனு தாக்கல்...
அதே பெயரில் களம் இறங்கிய சுயேச்சை!! வேலுமணிக்கு வேலுமணி செக்...
அதே பெயரில் களம் இறங்கிய சுயேச்சை!! வேலுமணிக்கு வேலுமணி செக்...
பாம்பின் பிடியில் கோழி… கடைசியில் நடந்த அதிரடி ட்விஸ்ட்
பாம்பின் பிடியில் கோழி… கடைசியில் நடந்த அதிரடி ட்விஸ்ட்
தேர்தல் காரணமா? மக்களின் உயிர் ஆபத்தில் – சிறுத்தை நடமாட்டம் மீது அண்ணாமலை காட்டம்...
தேர்தல் காரணமா? மக்களின் உயிர் ஆபத்தில் – சிறுத்தை நடமாட்டம் மீது அண்ணாமலை காட்டம்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
Maruti Suzuki Price: மாருதி சுசுகி கார்களின் விலை உயர்வு: நடுத்தர வர்க்கத்திற்கு அதிர்ச்சி! 2026-ல் புதிய விலை மாற்றம்?
மாருதி சுசுகி கார்களின் விலை உயர்வு: நடுத்தர வர்க்கத்திற்கு அதிர்ச்சி! 2026-ல் புதிய விலை மாற்றம்?
Embed widget