ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
திருச்சியில் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி போலீஸ் அதிகாரியின் கால் முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதில், பெரம்பூர் தொகுதியில் கடந்த வாரமே விஜய் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து, மரக்கடை பகுதியில் தனது பிரச்சாரத்தையும் தொடங்கினார்.
பின்னர் பிரச்சாரம் முடித்த கையோடு அங்கிருந்து விமான நிலையத்துக்குப் புறப்பட்டார்.
அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துக்கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் கால் மீது ஏறியது.
இதில் சம்பவ இடத்திலேயே கால் முறிந்தது வலியால் துடித்த காவலரை சக போலீஸ் அதிகாரிகளும், தவெக தொண்டர்களும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அந்தக் காவலருக்கு காலில் கட்டு போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, தவெக பிரச்சார கூட்டங்களில் முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுதில்லை என்று தவெக-வினர் குற்றாம்சாட்டி வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலரின் கால் முறிந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.























