மேலும் அறிய

Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பதில் சீனியர்களே அடித்துக் கொள்வதாகவும், தமிழக காங்கிரஸ் தரப்பில் இருந்து அனுப்பி வைத்த பட்டியலில் ராகுல்காந்தியே நேரடியாக தலையிட்டு சில பெயர்களை வெட்டி ஒட்டும் வேலையை பார்த்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஆவதன் பின்னணியில் காங்கிரஸ் தலைமையின் மாஸ்டர் ப்ளான் இருப்பதாகவும் சொல்கின்றனர்.

தொகுதி பங்கீட்டிலேயே விடாப்பிடியாக இருந்த காங்கிரஸ், நீண்ட இழுபறிக்கு பிறகு திமுகவிடம் 28 தொகுதிகளை கேட்டு வாங்கியது. தொகுதி டீலிங்கை முடித்தாலும் வேட்பாளர்கள் யார் என்பதில் இழுபறி போய்க் கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் இறங்கி விட்ட நிலையில், காங்கிரஸில் நீயா நானா போட்டி நடந்து வருவதாக சொல்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சீட் கொடுப்பதாக கட்சியினர் முனுமுனுக்கின்றனர். மற்றொரு பக்கம் சீனியர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என விடாப்பிடியாக இருப்பதாக தெரிகிறது. இப்படி ஒவ்வொரு தொகுதிக்கும் 3, 4 பேர் என அதிகார மோதல் இருப்பதால் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.


இந்த விவகாரங்களை எம்.பி ஜோதிமணியும் வெளிப்படையாகவே உடைத்திருந்தார். அவரது பதிவில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” என சொல்லி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை நடத்தி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நாள் தொடங்குவதற்கான முன்பே வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சீட் ஒதுக்கீட்டில் உள்ளடி வேலை நடக்கும் விவகாரம் தலைமை காதுகளுக்கு சென்றதும் ராகுல்காந்தியே தலையிட்டு பஞ்சாயத்தை முடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 

தமிழக காங்கிரஸில் இருந்து அனுப்பிய பட்டியலில் ராகுலே சில திருத்தங்களை செய்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது. 20க்கும் அதிகமான தொகுதிகளுக்கு டிக் அடித்துவிட்ட போதிலும் 7, 8 தொகுதிகளுக்கு இன்னும் பஞ்சாயத்து போய்க் கொண்டிருப்பதாக சொல்கின்றனர். அதனால் இப்போதே வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் எங்களுக்கும் சீட் வேண்டும் என டெல்லிக்கு படையெடுக்க வாய்ப்புள்ளதால், வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நாள் அருகில் வரும் போது அறிவித்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம் என தலைமை கணக்கு போட்டுள்ளதாம்.

இல்லையென்றால் புதுச்சேரியில் நடந்தது போல் முதலில் யாருக்கு வேண்டுமோ வேட்பு மனு தாக்கல் செய்யவிட்டு இறுதியில் வேட்பாளர்களை அறிவித்து மற்றவர்களை வாபஸ் வாங்க சொல்லலாம் என்ற ஐடியாவும் இருப்பதாக தெரிகிறது. அதேபோல் சோனியா காந்தி தான் வேட்பாளர்களை தேர்வு செய்தார் என்று சொன்னால் நிலைமை கட்டுக்குள் இருக்கும் என நினைத்து அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வரும் வரை வேட்பாளர்களை அறிவிக்காமல் காத்திருந்ததாகவும் சொல்கின்றனர்.

ஆனால் காங்கிரஸில் நடக்கும் இந்த குழப்பம் திமுக தலைமைக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விடாப்பிடியாக இருந்து 28 சீட் வாங்கியும் அதில் திருப்தி இல்லை கிரிஷ் சோடங்கர் பேசியிருந்தார். அதுவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடுப்பை கொடுத்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா என தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வரும் நிலையில் வேட்பாளர்களை அறிவிக்கவே காங்கிரஸ் திணறி வருவது மேலும் கடுப்பை கிளப்பியுள்ளதாக தெரிகிறது. நேற்று திருச்சியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளர் யாராக இருந்தாலும் கை சின்னத்தில் வாக்களியுங்கள் என வேட்பாளர்களே இல்லாமல் ஓட்டு கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் காங்கிரஸின் இந்த இழுபறியால் முதலமைசரும் அதிருப்தியில் இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு வாபஸ் முடிந்தது! களத்தில் எத்தனை பேர் தெரியுமா?
மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு வாபஸ் முடிந்தது! களத்தில் எத்தனை பேர் தெரியுமா?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பா.ம.க. அதிரடி முடிவு - யாருக்கும் ஆதரவில்லை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பா.ம.க. அதிரடி முடிவு - யாருக்கும் ஆதரவில்லை!
TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Jinping: 64 ஆண்டுகால வரலாற்றை மாற்றப்போகும் ட்ரம்ப்; சீன அதிபரின் அமெரிக்க பயணத்தில் நடக்கப்போவது என்ன.?
64 ஆண்டுகால வரலாற்றை மாற்றப்போகும் ட்ரம்ப்; சீன அதிபரின் அமெரிக்க பயணத்தில் நடக்கப்போவது என்ன.?
Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
Singapenn Sirapu Padai: 100 நாட்களில் சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள் என்னென்ன? பட்டியல் போட்ட தவெக
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
IND vs JAP: வரலாற்றிலே முதன்முறை.. ஜப்பானுடன் நாளை டி20 கிரிக்கெட் ஆடும் இந்தியா - எப்படி பார்ப்பது?
Chennai Weather: மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
Chennai Weather:மழை வெளுத்து வாங்கப்போகும் 15 மாவட்டங்கள்.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு!
இனி Express முதல் Mofussil வரை... 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை!- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
இனி Express முதல் Mofussil வரை... 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை.! சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!
CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!
RE Himalayan 440: 450 மாடலுக்கு பதிலா வந்த RE ஹிமாலயன் 440 ஓகே-வா.? வாங்குறதுக்கு முன்னாடி வேறுபாடுகள தெரிஞ்சுக்கோங்க
450 மாடலுக்கு பதிலா வந்த RE ஹிமாலயன் 440 ஓகே-வா.? வாங்குறதுக்கு முன்னாடி வேறுபாடுகள தெரிஞ்சுக்கோங்க
Tata Aeris Launch: அட, அழகா இருக்கே.! டிகோருக்கு பதிலாக புதிய ஏரிஸ்; ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி செடானை இறக்கும் டாடா
அட, அழகா இருக்கே.! டிகோருக்கு பதிலாக புதிய ஏரிஸ்; ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி செடானை இறக்கும் டாடா
Embed widget