மேலும் அறிய

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பாஜக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ள நிலையில், அதில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இம்முறை சீட் ஒதுக்கப்படாதது பேசுபொருளாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கவிருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. அந்தவகையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகள் என்ன என்பதை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார். மயிலாப்பூர், கோவை வடக்கு, புதுக்கோட்டை, மதுரை தெற்கு, சாத்தூர், விளவங்கோடு, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட தொகுதிகள் பாஜக வசம் சென்றுள்ளன. 

2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்த நிலையில் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனும், மொடக்குறிச்சியில் சரஸ்வதியும், நாகர்கோவிலில் காந்தியும், கோவை தெற்கில் வானதி சீனிவாசனும் வெற்றி பெற்றனர். ஆனால் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திருநெல்வேலியும், கோவை தெற்கும் இல்லை. இதன்மூலம் நயினார் நாகேந்திரனும் வானதி சீனிவாசனும் வேறு தொகுதிகளில் போட்டியிடவிருப்பது உறுதியானது..இந்நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி நயினார் நாகேந்திரனுக்கு  சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  2021 திருநெல்வேலியில் வெற்றி பெற்ற நயினார் 2024 மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். இந்த முறை அவரை தோற்கடிக்க திமுக தீவிரமாக முயற்சித்து வருவதால் திருநெல்வேலிக்கு பதிலாக சாத்தூர் தொகுதிக்கு மாறியுள்ளதாக சொல்கின்றனர். முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து அவர் சாத்தூரில் களமிறங்க முடிவெடுத்துள்ளார். 

மயிலாப்பூர் தொகுதி தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வானதி கோவை வடக்கில் தேர்தல் களம் காண்கிறார். மொடக்குறிச்சியில் கிர்த்திகா சிவக்குமார் பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார். அவினாசி தொகுதி எல் முருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் எம் ஆர் காந்தி மீண்டும் களமிறங்குகிறார். மதுரை தெற்கு வேட்பாளராக ராம சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, காங்கிரஸ் எம் எல் ஏவாக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு வந்த விஜயதரணிக்கு அவரது தொகுதியான விளவங்கோடு ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்த நிலையில் இந்த முறை அண்ணாமலைக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget