மேலும் அறிய

கோவையில் அணிவகுத்த பழங்கால கார்கள் ; பொதுமக்கள் ஆச்சரியம்

பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

கோவையில் நடைபெற்ற பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

கோவையின் பெருமைகளை பறை சாற்றும் வகையிலும், கோவை மக்களிடையே கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இந்த விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கோவை விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில், பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் பழங்கால கார்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அக்கார்களின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஒரு புல்லட்டில் அமர்ந்தபடி ஆட்சியர் சமீரன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

கோவையில் அணிவகுத்த பழங்கால கார்கள் ; பொதுமக்கள் ஆச்சரியம்

கண்காட்சியில் கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிப்படுத்தினர். கண்காட்சியில்  சுமார் 100 பழைய மாடல் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1980 ஆம் ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர், வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள், புல்லட், ஜாவா, ஸ்கூட்டர் லேம்பர்டா,ஜெடாக் வகை உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இடம் பெற்றுள்ளன.

கோவையில் அணிவகுத்த பழங்கால கார்கள் ; பொதுமக்கள் ஆச்சரியம்

முன்னதாக கார்கள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன. திடீரென பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன்னும், ஆர்வமுடத்திடனும் பார்வையிட்டனர். தொடர்ந்து பழங்கால கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் வைக்கப்படும் என கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். பழங்கால கார் கண்காட்சியை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்கள் வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்கள் வரும் முதல்வர் ஸ்டாலின்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!
பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEETVCK vs PMK : ’’அப்பா மாதிரியே புள்ள..வன்னிய விரோதி ஸ்டாலின்!’’ ராமதாஸ் ஆவேசம்Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்கள் வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்கள் வரும் முதல்வர் ஸ்டாலின்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!
பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!
திருமணம் நடக்காத விரக்தி: தற்கொலை செய்து கொண்ட பொறியியல் பட்டதாரி
திருமணம் நடக்காத விரக்தி: தற்கொலை செய்து கொண்ட பொறியியல் பட்டதாரி
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Embed widget