மேலும் அறிய

நடிகர் பார்த்திபன் புகாரின் பேரில் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு - காரணம் என்ன?

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரியல் வோர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர், டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.

பிரபல நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரியல் வோர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர், டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.  கடந்த பிப்ரவரி 10 அல்லது 20 ஆம் தேதிக்குள் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான அனைத்து பணிகளையும் முடித்துக் கொள்வதாக கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டணமாக சிவபிரசாத் 68 இலட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன் 42 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். மேலும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காத நிலையில் பார்த்திபன் ஏப்ரல் 19ஆம் தேதி வரை கால நீட்டிப்பு கொடுத்துள்ளார்.

கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு

இருப்பினும் நான்கில் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவப்பிரசாத், படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். இதனிடையே சிவப்பிரசாத் கடந்த மாதம் நான்காம் தேதி கிராபிக்ஸ் கட்சிகளுக்கான கட்டணமாக 88 இலட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதும், குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காததும் தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில் தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரியல் ஒர்க்ஸ் கிராபிக்ஸ் நிறுவனமானது பல்வேறு முன்னணி திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளது. குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜன் மாநகரம், மாஸ்டர், லியோ, விக்ரம், உள்ளிட்ட படங்களுக்கும், பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்திற்கும் இந்த நிறுவனமானது கிராபிக்ஸ் பணிகளை செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Embed widget