கூடை கூடையாய் வந்த காய், கனிகள்: ஜக்கி வாசுதேவ்க்கு பரிசு ‛மகா’சத்குரு பட்டம் சூட்டிய பாஜக!
மக்கள் உடல்நலம், மனநலம் காப்பதால் சத்குரு என்றழைக்கப்பட்டார். தற்போது மண்வளமும் காக்க முனைவதால் இனி இவர் மகாசத்குரு என்றழைக்கப்படுவார் என பாஜக தெரிவித்துள்ளது.
மக்கள் உடல்நலம், மனநலம் காப்பதால் சத்குரு என்றழைக்கப்பட்டார். தற்போது மண்வளமும் காக்க முனைவதால் இனி இவர் மகாசத்குரு என்றழைக்கப்படுவார் என சத்குருவுக்கு மகாசத்குரு என 9 கூடைகளில் காய் கனிகளை வழங்கி பாஜக புதிய பெயர் சூட்டியுள்ளது.
100 நாட்கள் 30,000 கி.மீ உலக நாடுகள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மண்வளம் காக்க மகத்தான முயற்சி எடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துமுடித்து, கோவை திரும்பிய ஈஷா சத்குரு அவர்களுக்கு கோவை கொடிசியா அருகிலுள்ள மைதானத்தில் பாஜக விவசாய அணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்கள் ஒன்பது கூடைகளில் சத்குருவுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் உண்மை உணர்ந்து, உரைத்து மக்கள் உடல்நலம், மனநலம் காப்பதால் சத்குரு என்றழைக்கப்பட்டார். தற்போது மண்வளமும் காக்க முனைவதால் இனி இவர் மகாசத்குரு என்றழைக்கப்படுவார் என்றார்.
30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம்
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 600-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 74 நாடுகளில் ஆதரவை பெற்று தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு சத்தியமங்கலத்தில் நேற்று (ஜூன் 21) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பண்ணாரி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சத்குருவை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், பொது மக்களும் சத்குருவை வரவேற்றனர். அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற ‘மண் காப்போம்’ இயக்க நிகழ்ச்சியிலும் மாலையில் கொடிசியாவில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, இன்று கீவையில் நடைபெற்ற நிகழ்வில், இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன்,மாவட்ட தலைவர் திரு.பாலாஜி உத்தமராமசாமி,மாநில செயலாளர் திரு.V.விஜயகுமார்,விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் திரு.வசந்தசேனன்,வடக்கு மாவட்ட தலைவர் திரு.ஆர்த்தி ரவி,தெற்கு மாவட்ட தலைவர் திரு.தர்மபிரகாஷ்,மாநில துணை தலைவர் திரு.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்