Bird Park : குதுகலத்தில் மக்கள்.. விரைவில் பறவைகள் பூங்கா...! எங்கு தெரியுமா ?
Bird Park : கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு விரைவில் வர இருக்கும் பறவைகள் பூங்காவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பூங்கா அனைத்தும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் மிருகக்காட்சி சாலையானது அதாவது வன உயிரியல் பூங்கா கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
இதையும் படிங்க: No Traffic, No Tension... இனி சென்னைக்கு ஈஸியா போகலாம் ; தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம்
இப்பூங்காவில் பறவைகள், விலங்குகள், ஊர்வன என 500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தற்போது, புள்ளி மான்கள், கடமான்கள், முதலைகள், நரிகள், பாம்பு வகைகள், குரங்குகள், கிளிகள், வாத்துகள், பெலிகான் பறவைகள், மயில்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வந்தது. இதனால், கோவை மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமான இந்த உயிரியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமானோர் வந்தனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வர்.
ஆனால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வன உயிரியல் பூங்காவானது மூடப்பட்டது. அதாவது 2018 ஆம் ஆண்டில் மாநகராட்சி சார்பில் எந்த ஒரு பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தினால் இது மூடப்பட்டது. இது தொடபாக., மாநகராட்சி ஆணையர் கூறுகையில்., 2024 - 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாநகராட்சி சார்பில் 75 லட்சம் செலவு அளிக்கப்பட்டு இது மாணவர்கள் படிக்கும் இடமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:விருதுநகர் மக்களே.. போக்குவரத்தில் மாற்றம்.. இனி வந்த வழியா தான் போக வேண்டும் !
இவ்வாறு இருக்கும் நிலையில் மாநகராட்சி ஆணையர் கூறியதாவது, இந்த உயிரியல் பூங்காவானது பறவைகள் பூங்காவாக மாற்றப்பட இருக்கிறது. அதாவது சமீபத்தில் திருச்சி மாவட்டத்தில் பறவைகள் பூங்காவானது மிகவும் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. அதேபோல் கோவை மாவட்டத்திலும் பறவைகள் பூங்கா அமைக்கப்படும். இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மக்கள் அனைவரும் இந்த பறவைகள் பூங்காவிற்கு வந்து பறவைகளை மற்றும் விலங்குகளை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக பட்ஜெட் மற்றும் எப்போது இந்த பணிகள் அனைத்தும் தொடங்கி நிறைவடையும் என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இது போன்ற பறவைகள் பூங்கா அமைக்கப்படுவது மக்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

