மேலும் அறிய

சமூக வலைத்தளம் , இ-காமர்ஸ் பயனர்களுக்கு எச்சரிக்கை ! தரவுகள் அழிப்பு ; அரசின் புதிய விதிகள்

சமூக வலைதளங்கள் ,  இ - காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்டவை, மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் கணக்குகளில் தனிநபர் தரவுகளை அழித்து விட வேண்டும் - மத்திய அரசு

சமூக வலைதளம் என்பது என்ன ?
 
சமூக வலைதளம் என்பது மக்களை இணைக்கும் இணைய தளங்கள் மற்றும் மென்பொருட்களின் தொகுப்பாகும். இது சமூக தொடர்புகளுக்கும் , தகவல்கள் பரிமாற்றத்திற்கும் உதவுகிறது. ஆன்லைன் ஷாப்பிங் , கல்வி, கேமிங் மற்றும் வணிகம் போன்ற பல செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும் , உலகெங்கிலும் உள்ள சமூகத்துடன் மக்களை இணைக்க இது ஒரு இடத்தை வழங்குகிறது. தனிநபர்கள் தங்களை வெளிப்படுத்தவும், தகவல்களைப் பகிரவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருக்கவும் இது உதவுகிறது. வணிகங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், விளம்பரங்கள் செய்யவும் இது ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது.
 
சமூக வலைத்தளங்களின் பயன்கள்
 
1.தகவல் தொடர்பு ; உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள மக்களுடன் எளிதாக தொடர்புகொள்ள உதவுகிறது.
 
2. கல்வி ; கல்வி சம்பந்தமான தகவல்கள், கட்டுரைகள், காணொளிகள் மற்றும் பலவற்றை பெறலாம்.

3. பொழுதுபோக்கு ; பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது.

4. சமூக பிணைப்பு ; ஒத்த கருத்துடையவர்கள் அல்லது ஒரே நோக்கமுடையவர்கள் ஒன்றாக இணைய இது உதவுகிறது. 

சமூக வலைத்தளங்களின் தீமைகள்

1. நேரத்தை வீணடித்தல் ; சமூக வலைத்தளங்கள் மக்களை அடிமையாக்கி, நேரத்தை வீணடிக்கச் செய்கின்றன.

2. தவறான தகவல்கள் ; சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவுவது எளிது.

3. மன அழுத்தம் ; சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

4. அடையாளம் மறைத்தல் ; சில சமயங்களில், மக்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து எதிர்மறையான செயல்களில் ஈடுபடவும் இது வழிவகுக்கிறது

தனிநபர் தரவுகள் பாதுகாப்பு விதிமுறைகள்

மத்திய அரசு , டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது. இதில், வாடிக்கையாளார்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் தனியார் நிறுவனங்கள், இதை எவ்வளவு காலம் பராமரிக்கலாம், பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்னென்ன, வெளிநாட்டு பரிமாற்றத்துக்கான நிபந்தனைகள் என்ன என்பவை குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இவை அடுத்த 12 முதல் 18 மாதங்களில், படிப்படியாக நடைமுறைக்கு வரவிருக்கின்றன.

3 ஆண்டுகள் - தகவல்களை அழிக்க வேண்டும்

இ - காமர்ஸ் நிறுவனங்கள், ஆன்லைன் கேமிங் தளங்கள், சமூக வலைதளங்கள் போன்றவை, ஒரு குறிப்பிட்ட பயனர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கணக்கை பயன்படுத்தாமல் இருக்கும்பட்சத்தில் அவரது தனிப்பட்ட தகவல்களை அழித்துவிட வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு இது குறித்து 48 மணி நேரத்துக்கு முன்பாக தகவல் வழங்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதலின்றி, ஸ்பேம் அழைப்புகளுக்கு அவர்களது போன் எண்களை கசிய விடுவோர் மீது நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். பொது நலன் கருதி, அரசு அதிகாரிகள் குறித்து கேட்கப்படும் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

250 கோடி அபராதம்

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, 2027 மே மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு நவம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுகிறது. தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க தவறும், தரவு பொறுப்பு நிறுவனங்களுக்கு, 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குடிமக்களுக்கு, தங்களது தனிப்பட்ட தகவல்கள் மீது கட்டுப்பாட்டை வழங்குவதோடு தங்களது தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், இணையதளத்தில் தனியுரிமையை பாதுகாக்கவும் இந்த விதிமுறைகள் உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Embed widget