மேலும் அறிய

தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

தொட்டியில் இருந்த விஷவாயு கசிந்து ரமேஷ் மூச்சு திணறி உதவிக்காக அலறியுள்ளார். அவருக்கு உதவி செய்ய கழிவு நீர் தொட்டியில் இறங்கிய அவருடைய சக தொழிலாளர்கள் ரத்தினம் (60 ) மற்றும் பிரசாந்த்  (27 ) ஆகிய இருவரையும்   விஷவாயு தாக்கியது .

ஆம்பூர் அருகே  தனியார் தோல் தொழிற்சாலையில் பணியின்போது  விஷவாயு தாக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு , மேலும் 2 பேர் கவலைக்கிடம் தொழிற்சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல தனியார்  தோல் தொழிற்சாலைகளும் , தோல்பதனிடும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றது .

தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

இதேபோல் ஆம்பூர் அடுத்த  துத்திப்பட்டு கிராமத்தில் NMH என்ற பெயரில் ஒரு தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .

 இந்நிலையில் இன்று தொழிற்சாலையில் பணியின்போது கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது . இதனை சுத்தம் செய்யும் பணியை  புத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (55 ) என்பவருக்கு அளிக்கப்பட்டு  அவர்  கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டுள்ள அடைப்பை எடுப்பதற்காக  தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டுள்ளார்.

தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

அப்பொழுது துரதிஷ்டவசமாக  தொட்டியில் இருந்த விஷவாயு கசிந்து ரமேஷ் மூச்சு திணறி உதவிக்காக அலறியுள்ளார் . அவரது அலறல் சத்தத்தை  கேட்டு அவருக்கு உதவிசெய்வதற்காக கழிவு நீர் தொட்டியில் இறங்க  அவருடைய சக தொழிலாளர்கள் , புத்தூர் கிராமத்தை சேர்ந்த  ரத்தினம் (60 ) மற்றும் மோதகபள்ளி பகுதியை சேர்ந்த பிரசாந்த்  (27 ) ஆகிய இருவரையும்   விஷவாயு தாக்கியது . கவலைக்கிடமான நிலையில் மூவரையும் ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

இதில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார் , மேலும் பிரஷாந்த் மற்றும் ரத்தினத்துக்கு , வேலூர் மற்றும் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .

தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் , உமராபாத் காவல் நிலைய போலீசார் அந்த தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு விரைந்து சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இது தொடர்பாக , தமிழ் நாடு தொழிற்சங்க நடுவனத்தின் மாநில பொதுச்செயலாளர் செ ரூபனை தொடர்பு கொண்ட பொழுது , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1500 கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது , இதில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் , தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் கருவிகளை வழங்குவதில்லை  .

தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

தொழிற்சாலை முதலாளிகளின் இந்த அலட்சியப்போக்கினால் , வருடாவருடம் பல தொழிலாளர்கள் உயிர் பறிபோககின்றது . இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படாத வண்ணம், தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்புகளை உறுதி செய்யவேண்டும் என்றும் , இறந்துபோன தொழிலார் ரமேஷுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் , உடனடியாக சம்பவம் நடந்த தொழிற்சாலையில்  மாவட்ட தொழிலக பாதுகாப்பு மைய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் எங்கள்  தமிழ் நாடு தொழிற்சங்க நடுவனத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget