மேலும் அறிய
Padappai Guna : பாஜகவில் இணையும் ரவுடி படப்பை குணா ? பரபரப்பான கூட்டம்.. முழு பின்னணி தகவல் இதோ..
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் படப்பை குணா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

படப்பை குணா
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என். குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும்.

இவற்றில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவர் மீது 12 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளைத்துரை தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் , எப்படியும் கைது செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்டு, படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சிறையில் இருந்த படப்பை குணா தற்போது ஜாமினில் கடந்த மாதம் வெளியே வந்து தினந்தோறும், உத்திரமேரூர் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வருகிறார். படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற , பாஜக கட்சியில் உறுப்பினர்கள் இணையும் கூட்டம் நடைபெற்றது.

பாஜகவின் மாநில செயலாளர், வினோஜ் P செல்வம் தலைமையில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்ற சூழ்நிலையில், படப்பை குணா திடீரென ஆதரவாளர்களுடன் கூட்டத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, கூட்டத்தில் இருந்த சிலர் படப்பை குணாவை கண்டவுடன் விசில் அடித்து கைதட்டி வரவேற்றனர். இதனை அடுத்து, மண்டபத்தில் இருந்த, மேடைக்கு பின்னால் சென்று அமர்ந்து கொண்டார். இதனை அடுத்து, பாஜகவில் மாநிலம் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் படப்பை குணா சிறிது நேரம் ஆலோசனை செய்துவிட்டு, ஆதரவாளருடன் மீண்டும் வீட்டுக்கு சென்றார். இதனை அடுத்த அங்கிருந்து சென்று விட்டார். ஏற்கனவே பல ரவுடிகள் பாரதி ஜனதா கட்சியில் இணைவது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கூட்டத்தில் படைப்பை ரகசியமாக கலந்து கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion