மேலும் அறிய
Advertisement
Chembarambakkam : செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம் ..
கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சில நாட்களாக பரவலாக பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழைப்பொழிவு காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 775 கன அடியாக உயர்ந்திருந்த நிலையில், ஏரியிலிருந்து 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23.60 அடியாகவும், நீர் இருப்பு 3540 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது. மேலும் கிருஷ்ணா நதிநீர் வரத்தாலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று காலை நேர நிலவரப்படி நீர் மட்ட உயரம் 23.60 அடி, மொத்த கொள்ளளவு 3540 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 775 கன அடியாகவும், உபரி நீர் வெளியேற்றம் 250 கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்ததாலும் நீர் வரத்து அதிகரித்தால், மட்டுமே உபரி நீர் வெளியேற்றத்தை அதிகரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் 250 கன அடி நீர, இருந்து, இன்று காலை 9 மணி அளவில் 500 கன அடி நீர் ஆக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபரி நீர் திறப்பதற்கு முன்பாக இந்த பகுதியை சுற்றியுள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பெடு, சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை 23.5 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Crime : நள்ளிரவு பூஜை.. நாகதோஷம்.. பகீர் திட்டம்.. கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சாமியார் கைது..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion