மேலும் அறிய
Advertisement
Crime : நள்ளிரவு பூஜை.. நாகதோஷம்.. பகீர் திட்டம்.. கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சாமியார் கைது..
திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பூசாரி ஒருவரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முனுசாமி சாமியார்..
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் ஆசிரமத்திற்கு இளம் பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் பூசாரியிடம் சென்றால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் மற்றும் விரைவில் திருமணம் ஆகும் என்று நம்பிக்கையில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் நள்ளிரவு பூஜை செய்து வந்துள்ளார்.
கல்லூரி மாணவி..
இந்நிலையில் செம்பேடு பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் குடும்பத்துடன், அந்த கோவிலில் உள்ள பூசாரியை முனுசாமி அணுகியுள்ளார், நாகதோஷம் இருப்பதாக கூறி அப்பெண்ணை அமாவாசை, பவுர்ணமி பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுகளாக அவர் கோவிலில் தங்க வைத்துள்ளார்.
அமாவாசை, பௌர்ணமி பூஜை
அதேபோன்று கல்லூரி மாணவிக்கு அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமின்றி, இரவு நேரத்தில் மாந்திரீகம் செய்து வந்துள்ளார். பூசாரி முனுசாமி கொரோனா காலம் என்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகள், மாணவி கல்லூரி விடுமுறை நாட்களிலும் அங்கேயே சென்று தங்கி வந்துள்ளார். அதன்பிறகு கல்லூரி திறந்த பிறகு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கோவிலுக்குச் சென்று அங்கேயே தங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி கல்லூரி மாணவியை பூசாரி பூஜைக்கு வருமாறு அழைத்துள்ளார். 11-ஆம் தேதி இரவு 12 மணிவரை பூசாரிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துள்ளார் கல்லூரி மாணவி.
விடியற்காலை மாணவிக்கு..
இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் கல்லூரி மாணவி திடீரென்று வாந்தி எடுத்து சோர்வடைந்து உள்ளார். பிறகு அவர் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதை தொடர்ந்து மாணவி கல்லூரியின் பெரியம்மா இந்திராணி, பூசாரி முனுசாமியிடம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்யுமாறு கூறி உள்ளார் .
ஆனால் பூசாரி இரண்டு மணிநேரம் அமைதி காத்து அதன் பிறகு ஆட்டோவை வர வைத்துள்ளார். ஆட்டோவில் மாணவியை வெங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் அவர் பூச்சிமருந்து உட்கொண்டு இருப்பதால் அதற்கான சிகிச்சை அளித்தபின் அவரை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி கல்லூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெற்றோர் சரமாரி புகார்
இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு. உயிரிழந்த மாணவியின் உடல் கூறு ஆய்வு அடிப்படையிலும், மாணவி பாலியல் ரீதியில் ஏதாவது துன்புறுத்தப்பட்டு உள்ளாரா, என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று.
சாமியாரை தட்டித்தூக்கி சிபிசிஐடி போலீசார்
இது குறித்து பென்னாாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில், முனுசாமி திட்டம்போட்டு மாணவியை வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் நேற்று சாமியார் முனுசாமியை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்
வேலைவாய்ப்பு
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion