மேலும் அறிய

கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்

அகர்வால் ரிலிஃப் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் , 50 வது ஆண்டைக் குறிக்கும் வகையில்  பொன்விழா கொண்டாடியது. 

50 வது ஆண்டு பொன்விழா

அகர்வால் ரிலிஃப் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் , கல்வி , சமூக சேவை ஆகியவற்றில் தங்களது அர்ப்பணிப்பின் 50 வது ஆண்டைக் குறிக்கும் வகையில்  பொன்விழா கொண்டாடியது. 

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த பொன்விழா நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான  ராம்நாத் கோவிந்த், துக்ளக் இதழின் ஆசிரியர்  எஸ். குருமூர்த்தி உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கல்வி மட்டுமே ஒருவரால் மற்றொருவருக்கு கொடுக்க முடிந்த செல்வம். நான் எனது கிராமத்தில் ஆரம்ப பள்ளி மட்டுமே இருந்தது. ஆனால் அதற்கு மேல் படிப்பை தொடர வேண்டும் என்றால் 6 கிலோ மீட்டர் பயணித்து தான் படிக்க வேண்டும். சுட்டெரிக்கும் வெயிலில் அதனை பொருட்படுத்தாமல் நான் பயணித்து படித்தேன்.

கல்வி பயிலும் போது நிறைய சவால்களை நான் எதிர்கொள்ள நேர்ந்தது. இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் நான் கற்ற கல்வி மட்டுமே.

கல்வியின் முக்கியத்துவம் மிகவும் பெரிது. இந்திய மக்கள் தொகையில் இன்று 24 சதவிகித பேர் 14 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். 50 சதவிகிதம் பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கையில் தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு உள்ளது.

இளைஞர்களின் முற்போக்கு சிந்தனை

முற்போக்கு சிந்தனை உள்ள இளைஞர்களால் மட்டுமே முற்போக்கு சிந்தனை கொண்ட நாட்டை உருவாக்க முடியும். பொதுவாகவே நம்முடைய கல்வி முறை என்பது மனப்பாடம் செய்வதை தாண்டி, ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

அப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க வேண்டியது என்பது நமது ஆசிரியர்களின் பொறுப்பு. அதற்கு மிக முக்கியமானதாக கற்பிப்பதில் புதிய கண்ணோட்டம் மற்றும் மாணவர்களுக்கான எதிர்கால சிந்தனைகளை குறித்த கற்பிப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுத்திடல் வேண்டும்.

கற்பிப்பதில் நவீன கல்வி முறையான டிஜிட்டல் தொழில் முறையை பயன்படுத்தி, மாணவர்களின் திறனை மேம்படுத்தப்பட்ட ஒரு அனுபவத்தை, ஆசிரியர்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.

மற்ற நாடுகள் இந்தியாவை எதிர்பார்க்கிறது

ஒரு நல்ல பள்ளி கட்டிடமும், வசதி வாய்ப்புகள் நிறைந்த வகுப்பறைகள் மட்டுமே, நல்லதொரு கல்வியை கொடுப்பதற்கான அடையாளம் இல்லை. நல்ல கல்வியை கொடுப்பதற்கு திறன்மிக்க ஆசிரியர்கள் மட்டுமே பொதுமானவர்கள். சிறந்த மாணவர்களை உருவாக்குவதே சிறந்த ஆசிரியர்கள் தான்.

ஆசிரியர் மட்டுமே மாணவரை நல்ல மனிதராக உருவாக்க முடியும். நல்ல எண்ணங்களுடன் உழைப்பை செலுத்தி மாணவர்கள் நல்ல மனிதர்களாக உருவெடுக்க வேண்டும். நல்ல மனிதரால் மட்டுமே நல்ல அப்பா, அம்மா, நண்பர் மற்றும் நல்ல தொழிலதிபர் என பல பரிமாணங்களில் உருவெடுக்க முடியும்.

எதிர்காலத்தில் மாணவர்களுக்கு கற்றுத் தரவேண்டியது எதை கற்க வேண்டும், எதை கற்க கூடாது என்பது தான். இக்காலத்தில் உலகினுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நாடாக இந்தியா இருந்து வருகிறது. மற்ற நாடுகளும் இந்தியாவை எதிர்பார்க்கிறது.

அதன் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் தூணாக நம் மாணவர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன். வளர்ந்த இந்தியாவை உருவாக்கக் கூடிய பொறுப்பு இப்போதைய மாணவர்களுக்கு உள்ளது. நிர்சயம் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம் மாணவர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள் என நான் நம்புகிறேன், என் வாழ்த்துகளும் தெரிவிக்கிறேன்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு

ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாணவர்கள் அவர்களின் கால்களை கழுவும் வழிமுறை பல ஆண்டுகளாக நமது நாட்டில் பின்படுத்தப்படுகிறது. இது போன்ற வழிமுறைகளால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையான உறவு மேலும் இணக்கம் ஆகிறது.  ஆனால் தற்போது வழிமுறைகளை பின்பற்றக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

கல்வி முறையை ஒரே நாளில் மாற்ற முடியாது

தற்போதைய கல்வி நிறுவனங்கள் வேலை தேடுபவர்களை உருவாக்காமல் வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும். படித்த இளைஞர்கள் பிற நிறுவனங்களிடம் வேலை தேடி செல்லாமல் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும். 

இந்த உலகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும்  உரிமையானது என்கிற கொள்கை  இந்தியா அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

தமிழகத்தில் வட இந்திய சமுதாயத்தினர் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர் ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களால் அவர்கள் செய்யும் சேவை மக்களுக்கு தெரிவதில்லை. ஆகையால் இனி வரும் நாட்களில் அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

நமது கல்வி முறையை ஒரே நாளில் மாற்றி விட முடியாது அதற்கு அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அவர்களை எதிர்பார்க்காமல் கல்வி நிறுவனங்களும் தனித்தனியாக அவர்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

தலைப்பு செய்திகள்

Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Chennai Bike Race: இனி ஓடவும் முடியாது.. ஒளியும் முடியாது! பைக் சாகசத்தில் ஈடுபட்டால் ஆப்பு தான்! சென்னை போலீசின் புதிய அஸ்திரம்!
Chennai Bike Race: இனி ஓடவும் முடியாது.. ஒளியும் முடியாது! பைக் சாகசத்தில் ஈடுபட்டால் ஆப்பு தான்! சென்னை போலீசின் புதிய அஸ்திரம்!
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
" திருமணம் மீறிய உறவு " கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுவன் !! நடந்தது என்ன ?

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget