மேலும் அறிய

Chennai Egmore : அடுத்து 3 ஆண்டுகளில் நவீனமாக மாறும் எழும்பூர் ரயில் நிலையம்... ரூ. 734.91 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்...

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து நகரங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வகையில்  பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளை ரயில்வே அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. தற்போது 40 ரயில் நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்துவதற்காக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14 ரயில் நிலையங்களை மறுசீரமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இவற்றுக்கான பணிகள் அடுத்த 5 மாதங்களில் தொடங்கும். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதன் மூலம், வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, அது பொருளாதாரத்தில் பல மடங்கு சிறந்த விளைவுகளை உருவாக்கும்.

எழும்பூரில் பணிகள் தொடக்கம்

அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் 14 ரயில் நிலையங்களை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூபாய் 734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, ஹதராபாத்தை சேர்ந்த  தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளானது 3 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் வசதியான காத்திருப்பு அறைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள், உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதற்கான விற்பனை மையங்கள் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  

மேலும், புதிய கட்டடம், பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், காத்திருப்பு அரங்கம், அடுக்குமாடி வாகன காப்பகம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 11 இடங்களில் ஆழ்துளை கருவிகள் மூலம் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பசுமை கட்டமைப்பு தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைக்கப்படும். பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அம்சங்களை கொண்டதாக இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

6 மாத கள்ளக்காதல் ! தடையாக இருந்த கணவன் ! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம் ! உறைந்து போன தெலுங்கானா
6 மாத கள்ளக்காதல் ! தடையாக இருந்த கணவன் ! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம் ! உறைந்து போன தெலுங்கானா
தனிமையில் உல்லாசம் !! நீ செத்து போ நான் நிம்மதியா இருப்பேன் !! ஆசை காதலி சொன்ன வார்த்தை
தனிமையில் உல்லாசம் !! நீ செத்து போ நான் நிம்மதியா இருப்பேன் !! ஆசை காதலி சொன்ன வார்த்தை
விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி
விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி
Chennai Power Cut: சென்னைல நாளை(27.05.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல நாளை(27.05.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
CPM Slams TVK:
CPM Slams TVK: "ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல.." - தவெக-வில் இணைந்த 4 அதிமுக MLA-க்கள்; சிபிஎம் கண்டனம்!
TVK Vijay:
TVK Vijay: "முட்டு கொடுக்க முடியாது முதல்வரே!" பயிர்க்கடன் அறிவிப்பு.. தவெக மீது சொந்தக் கட்சி வேட்பாளரே அதிருப்தி!
Embed widget