மேலும் அறிய

EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்

EPS vs VIJAY: போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? என முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தொடரும் குற்றங்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலை சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில், கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் தெரிவித்தவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இது தான் மாற்றமா.? இபிஎஸ் கேள்வி

போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார்.  இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.

மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?

“ஆட்சி நடத்துவது எப்படி”- ஆறு மாத Crash Course 

“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை! தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. 

கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?

மாய உலகில் இருந்து வெளியே வாங்க

தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Vijay vs Nainar Nagendran : பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Embed widget