மேலும் அறிய

Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்

Annamalai: தூத்துக்குடியில் இளம்பெண்ணை தவெகவைச் சேர்ந்த இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Annamalai: பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.

திமுக பாணி செயல்பாடுகள்?

பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்”என அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் கைது..!

வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்னை ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். அப்போது அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலக்கி கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்த அந்த பெண்,  ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீசார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குற்றவாளிகள் யாரயினும் உடனடியாக கைது செய்யப்பட்டு, உடனடியாக கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகளே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்

டெல்லியில் அண்ணாமலை

இதனிடையே, டெல்லியில் உள்ள அண்ணாமலை பாஜக தேசிய தலைவரை நிதின் நபினை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும், இதற்கு ரஜினிகாந்தின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 4ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடும்போது, புதிய கட்சி அல்லது இயக்கம் தொடர்பான அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
DMK: கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கல..! தவெக-வை தரம் தாழ்ந்து பேசிய முன்னாள் திமுக அமைச்சர் - நீங்களே பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Vijay vs Nainar Nagendran : பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Ultraviolette Bike Offer: உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
Longest Range EVs: ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
Embed widget