மேலும் அறிய

பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!

அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் கல்விக் கட்டணத்தைத் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது-தனியார் பள்ளிகள் இயக்குநரகம்.

தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கல்விக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் கல்விக் கட்டணத்தைத் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்தப் பள்ளிகளில்?

அனைத்து தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக், CBSE மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளின் முதல்வர்களுக்கும், பள்ளிகளில் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கல்வி (fee Structure) கட்டணத்தினை பொது மக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும், சார்ந்த பள்ளிகளின் இணைய தளங்களில் வெளியிடவும் மற்றும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்படவும் வேண்டும்.

அவ்வாறு வழங்குவதை அனைத்து தனியார், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், CBSE மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோல அவ்வாறு தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் தங்களுடைய கல்விக் கட்டணத்தை வெளிப்படைத் தன்மையுடன் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 4(1)(b) பிரிவின்படி விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 5ஆம் தேதிக்குள்…

எனவே மேற்காணும் ஆணையினை தவறாமல் பின்பற்றி தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் 05.06.2026 க்குள் கல்வி கட்டணத்தை விளம்பரப்படுத்த அறிவுறுத்துமாறும் மேலும் 10.06.2026 க்குள் சார்ந்த விவரத்தினை அறிக்கையாக இவ்வியக்ககத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தனியார் பள்ளிகள்) தெரிவிக்கப்படுகிறது.

மேற்காணும் விவரங்கள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) பள்ளி ஆய்வின்போது உறுதி செய்யப்பட வேண்டும்.

அலுவலக கோப்பில் வைக்க வேண்டும்

மேலும் மேற்காணும் செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை புகைப்பட ஆதாரம் மற்றும் ஒப்புகையுடன் அனைத்து வகை பள்ளிகளிலிருந்து பெற்று தங்கள் அலுவலக கோப்பில் வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
Embed widget