மேலும் அறிய

ஐந்தரை லட்சம் லிட்டர் பாலை நாசர் எனும் பூனைக்குட்டி குடித்துவிட்டது: ஜெயக்குமார் தாக்கு!

”தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாகிறது. அதில், நாள்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டரை நாசர் எனும் பூனைக்குட்டி குடித்துவிட்டது” - ஜெயக்குமார்.

ஆவின் பால் பாக்கெட் அளவு குறைத்து விற்பனை செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஆவின் பால் அளவு குறைப்பு சர்ச்சை

தமிழ்நாட்டில் ஆவின் நிர்வாகம் சார்பில் விற்கப்படும் பால் பாக்கெட்டின் எடை அளவு குறைவாக உள்ளதாக முன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது. 500 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பால் பாக்கெட் 520 கிராம் வரை இருக்க வேண்டும். ஆனால், 500 மில்லி லிட்டர் கொண்ட பால் பாக்கெட் 430 கிராம் மட்டுமே எடை உள்ளதாக முன்னதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆவின் நிர்வாகம் விளக்கம்

தொடர்ந்து ஆவின் நிர்வாகம் அளித்த விளக்கத்தில், “ஜூலை 30ம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட் எடையின் அளவு மட்டுமே குறைவாக இருந்துள்ளது. அதுவும் உடனடியாக வாடிக்கையாளர்க்கு மாற்றி வழங்கப்பட்டது. நுகர்வோரின் நலம் பேணும் வகையில் தரத்துடன் கூடிய பால் விநியோகம் செய்யப்படும். இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதேனும் அளவு குறை இருப்பின் உடனடியாக நுகர்வோர்களுக்கு , அதற்குரிய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜெயக்குமார் விமர்சனம்

இந்நிலையில், முன்னதாக ஆவின் பால் எடை குறைப்பு சர்ச்சை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ”இவர்கள் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்து சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவர்கள். ஊழல் செய்வது இவர்களுக்கு கைவந்த கலை.

பால்வளத்துறை அமைச்சர் நாசர் தன் முன்னோர்கள் வழியில் அறிவியல்பூர்வமாக ஊழல் செய்துள்ளார். பால் பாக்கெட்டில் இருக்கும் பாலை திருடி ஏறக்குறைய பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பாலைக் கூட குறைத்து ஆதாயம் தேடியுள்ளனர்.

பால்வளத்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாகிறது. அதில், நாள்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டரை நாசர் எனும் பூனைக்குட்டி குடித்துவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அவரது தந்தைக்கு ஊர் முழுவதும் சிலை வைத்து அரசு கஜானாவை காலி செய்கிறார். மீனவர்கள் அன்றாடம் காய்ச்சிகள்.  கடலில் பேனா வைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆவின் நிறுவனத்தில் நாள்தோறும் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

“தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 70 லட்சம், 500 மில்லி பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த மோசடி மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவுக்கு கொள்ளை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையான நீதி விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு
இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Embed widget