பயணிகளை ஈர்க்க விண்டேஜ் தோற்றம்… சென்னையில் பழைய நீராவி என்ஜின் ரயில்போலவே தயாராகியுள்ள நவீன வசதிகொண்ட ரயில்!
இந்திய ரயில்வேயின் செழுமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற ரயிலாக இதை விளம்பரப்படுத்த தெற்கு மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்திய ரயில்வே விரைவில் தங்கள் பழங்கால நீராவி என்ஜின்கள் போன்ற தோற்றத்துடன் மின்சாரத்தில் ஓடும் ரயில்களை இயக்குகிறது. வந்தே பாரத் மற்றும் விஸ்டாடோம் ரயில்களில் உள்ள பெட்டிகள் தரும் வசதியை இந்த சிறப்பு பாரம்பரிய ரயில் வழங்கும்படியாக சேவை தொடங்கப்பட்டுள்ளது.
விண்டேஜ் டிசைனில் புதிய ரயில்
பலருக்கும் பழைய பொருட்களின் டிசைன் பிடிக்கும். அதன் மீது எல்லோருக்குமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால் 'ஆண்டிக்' பொருட்கள் என்ற பெயருடன் அது போன்ற விஷயங்கள் கடைகளில் கூட விற்கப்படும். முன்பிருந்த பழங்கால ரயில் என்ஜின் முகப்புகள் போன்று இப்போதெல்லாம் ரயில்கள் வருவதில்லை என்ற ஆதங்கம் பலருக்கும் இருந்திருக்கலாம். அதனை தீர்க, 'டி' ட்ரெயின் என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரியம் மற்றும் நவீன அம்சங்களை ஒருங்கிணைப்பதோடு, அழகியலை முன்னிறுத்துகிறது இந்த ரயில். இந்திய ரயில்வேயின் செழுமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற ரயிலாக இதை விளம்பரப்படுத்த தெற்கு மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் தயாராகியுள்ளது
தமிழ்நாட்டில் தயாராகியுள்ள இந்த தென்னக ரயில்வேயின் பெரம்பூர் கேரேஜ் அண்டு வேகன் ஒர்க்ஸ், ஆவடி ஈமு கார் ஷெட் மற்றும் திருச்சி கோல்டன் ராக் ஒர்க்ஷாப் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்த சுற்றுலா ரயில் உள்ளது. தெற்கு ரயில்வேயின் அதிகாரி ஒருவர் நியூஸ் 18 இடம் கூறுகையில், "ரயிலின் டிரைவிங் டிரெய்லர் கார்கள் பழங்கால நீராவி இன்ஜின்களைப் போல மாற்றியமைக்கப்பட்டுள்ளன, ஆனால் இவை மின்சாரத்தால் இயக்கப்படும்," என்றார். இந்த ரயில் 1895 இல் இயக்கப்பட்ட முதல் உள்நாட்டு நீராவி எஞ்சினான F734 இன் தோற்றத்தையும் உணர்வையும் பிரதிபலிக்கிறது. நீராவி என்ஜின் முகப்பு போல மாற்றியமைக்கப்பட்டு ரயிலின் இரு முனைகளிலும் இணைக்கப்பட்ட MEMU டிரைவிங் மோட்டார் காரின் இரண்டு லோகோக்களை 'T' ட்ரெயின் கொண்டுள்ளது. இது 1895 இல் கட்டப்பட்ட முதல் உள்நாட்டு நீராவி இன்ஜின் F734 இன் தோற்றத்தையும் உணர்வையும் பிரதிபலிக்கிறது.
விண்டேஜ் டச் - சொகுசு ரயில்களின் உணர்வு
இன்டெக்ரல் கோச் பேக்டரி (ஐசிஎஃப்) வடிவமைத்த நான்கு சுய-உருவாக்கும் குளிரூட்டப்பட்ட விஸ்டாடோம் வகை பெட்டிகள் ரேக்கின் நடுவில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகளில் மூன்று சேர் கார்கள் மற்றும் ஒன்று உணவக காராக நியமிக்கப்பட்டுள்ளது. "இந்த நான்கு பெட்டிகளும் மாற்றப்பட்டு, நவீன அம்சங்களையும், அழகாகவும் வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள் உடன் ஒரு இனிமையான மற்றும் வசதியான பயண அனுபவத்தைப் தரும்" என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயிலின் எக்ஸிகியூட்டிவ் சேர் காரில் 48 பேர் அமரும் இருக்கை வசதி உள்ளது. இந்த இரட்டை இருக்கை ஏற்பாடுகள் விஸ்டாடோம் மற்றும் வந்தே பாரத் போன்ற சாய்வு வகை சேராக இருக்கும். ஒவ்வொரு பயணிக்கும், ஒரு பிரத்யேக சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. இந்த கோச்சின் ஜன்னல்கள் பெரிதாக அமைக்கப்பட்டு, பரந்த காட்சியை அளிக்கும் விஸ்டாடோம் பெட்டிகளைப் போலவே இருக்கும்.
சென்னை சென்ட்ரலில் வைக்கப்பட்டுள்ளது
கண்ணாடி உடைவதைத் தடுக்க ஒரு பாதுகாப்பு அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் மினி பேண்ட்ரி உபகரணங்களுடன் மின்சாரத்தால் இயக்கப்படும் தானியங்கி பெட்டி நெகிழ் கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. விண்டேஜ் டச் கொடுக்க, ரயிலில் அழகியலை கூட்ட, லக்கேஜ் ரேக் ஏற்பாடு மற்றும் வெளிப்புறச் சுவர்கள் வர்ணம் பூசப்பட்டு தீம் அடிப்படையிலான வினைல் ரேப்பிங்கால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மஹாராஜா போன்ற சொகுசு ரயில்களின் உணர்வைச் சேர்க்கும் வகையில், இந்த புதிய ரயிலில் ஏசி உணவகம் இருக்கும். டைனிங்-கம்-பேன்ட்ரி 28 பேருக்கு வசதியான இருக்கைகளுடன் வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த இந்த ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது