"பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்" - சோகத்தில் தமிழ் திரையுலகம்.!

ஒரு கட்டத்தில் தனது இரண்டு குழந்தைகளில் பசியாற்றக்கூட பணமில்லாமல் தவித்து வந்தார் கார்த்திக்.

தமிழ் திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துவந்த தீப்பெட்டி கணேசன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் அவர்கள் உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலமாகியுள்ளார். இந்த செய்தி தமிழ் திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

10 ஆண்டுகளுக்கு முன்பு ரேணிகுண்டா, பில்லா 2 போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த நடிகர் தான் தீப்பெட்டி கணேசன் என்னும் கார்த்திக். ஆனால் காலங்கள் நகர நகர அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்தன. ஒரு கட்டத்தில் தனது இரண்டு குழந்தைகளில் பசியாற்றக்கூட பணமில்லாமல் தவித்து வந்தார் கார்த்திக். 

இதுகுறித்து அவர் ஒரு தனியார் நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் "உச்சத்தில் இருந்த தனது மார்க்கெட், தனது மேனேஜர் ஒருவரால் சரிந்ததாக கூறினார். இயக்குனர்களிடம் தன்னுடைய சம்பளத்தை அதிகமாக சொல்லி படவாய்ப்புகள் தனக்கு குறையே அவரே காரணம் என்று கூறினார்." இந்நிலையில் அந்த நிகழ்ச்சி மூலம் தல அஜித் உள்ளிட்ட பலரிடம் அவர் உதவி கேட்ட நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், சினேகன் மற்றும் தமிழக மக்கள் பலரும் அவருக்கு உதவி செய்தனர். 

சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்கு அவர் திரும்பினாலும் கொரோனா காலகட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த சூழலில் உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது காலமாகியுள்ளார்.  

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை<br>இதய அஞ்சலி கணேசா.. <a href="https://t.co/TWQIHHgElt" rel='nofollow'>pic.twitter.com/TWQIHHgElt</a></p>&mdash; R.Seenu Ramasamy (@seenuramasamy) <a href="https://twitter.com/seenuramasamy/status/1373856034943426560?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 22, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அவரை வைத்து படங்கள் இயக்கிய பிரபல இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

Tags: Theepeti Ganesan Actor Karthik Seenu Ramasamy Billa 2 Renigunda

தொடர்புடைய செய்திகள்

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

மதுரை : 5 மாவட்ட கொரோனா தொற்று, தடுப்பூசி நிலவரம் என்ன?

மதுரை : 5 மாவட்ட கொரோனா தொற்று, தடுப்பூசி நிலவரம் என்ன?

திருவண்ணாமலை : குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

திருவண்ணாமலை :  குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

டாப் நியூஸ்

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்