"ஒரே கல்லூரியில் 96 மாணவர்களுக்கு கொரோனா" - ஆந்திராவில் அதிர்ச்சி.!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 90-க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்விற்கு பின் மீண்டும் இயல்பு நிலைக்கு பொதுவாழ்க்கை திரும்பினாலும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததால் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை துவக்கத்தை போலவே அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 90-க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள விடுதியில் உள்ள 850 மாணவர்களுக்கு நடத்தக்கப்பட்ட சோதனையில் இந்த முடிவு கிடைத்ததை தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்குள் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு 90 மாணவர்களும் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருக்கமாக இருந்த மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதேபோல தமிழகத்தின் தஞ்சையிலும் தனியாருக்கு சொந்தமான வேளாண் கல்லூரியில் பயிலும் 24 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.