மேலும் அறிய

Health Tips: சாப்பாடவிடவும் தூக்கம் முக்கியம்! சரியா தூங்கலன்னா இவ்ளோ சிக்கல் இருக்கு!! இதைப்படிங்க முதல்ல!

தூக்கமின்மை விரக்தியான மனநிலையை உண்டு பண்ணுவதோடு ஆத்திரம் மற்றும் எதிர்மறையான மனநிலையை உருவாக்குகிறது.

பொதுவாக பூமியில் படைக்கப்பட்டிருக்கும் அனைத்து உயிரினங்களும் மூன்று விஷயங்களை திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கின்றன.அது உணவு,இனப்பெருக்கம் மற்றும் ஓய்வு. இதில் மனிதர்களாகிய நமக்கு ஓய்வு என்பது தூக்கமாக இருக்கிறது.இந்த தூக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் மட்டுமே  மிக சரியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று சொல்ல முடியும்.

ஆம் மிகச் சரியான தூக்கமானது சிறந்த ஆரோக்கியம்,சுறுசுறுப்பான உடல்,தெளிவான சிந்தனை, சிறப்பான செயல்திறன் மற்றும் எதிர்கால திட்டமிடல் என அனைத்தையும் வழங்குகிறது.மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒரு மனிதன் தினந்தோறும் ஆக குறைந்தது 8 மணி நேரம் உறங்க வேண்டும்.

இதிலும் குறிப்பாக 4 மணி நேரங்கள் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்ல வேண்டும். இந்த தூக்கமானது இரண்டு நிலைகளைக் கொண்டிருக்கிறது படுத்தவுடன் முதலில் 4  மணிநேரம் மேலோட்டமான தூக்கம், அதாவது கனவுகளுடன் கூடியதாக இருக்கிறது.அதற்கு பிறகான நான்கு மணி நேரம் தூக்கமே நம்மை ஆழ் நிலைக்கு கொண்டு செல்கிறது.இந்த ஆழ்நிலை தூக்கத்தில் கனவுகள் இருப்பதில்லை.இப்படி கனவுகள் அற்ற  ஆழ்நிலை தூக்கத்தை ஒவ்வொரு மனிதரும் அவசியம் அனுபவிக்க வேண்டும்.

பெரும்பாலும் இரவில் 12 மணியிலிருந்து விடியற்காலை 5 மணி வரையிலான நேரமே ஆழ்நிலை தூக்கத்திற்கு உடலானது நம்மை தயார் செய்து வைத்திருக்கிறது.இன்று வேலை பளுவின் காரணமாக நிறைய நபர்கள் இரவிலும் வேலை பார்க்க நேரிடுகிறது. அப்படிப்பட்டவர்கள் அதற்கு மாற்றாக பகல் நேரங்களில் ஆக குறைந்தது பத்து மணி நேரமாவது உறங்க வேண்டும்.இப்படி ஒரு மனிதர் ஓய்வுக்கான தூக்கத்தை அவர் உடம்புக்கு தர மறுத்தால் நிறைய பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இப்படி தூக்கத்தை அனுமதிக்காத நபர்கள் ஒரு விதமான பதட்டமான மனநிலையை கொண்டிருப்பர். இதைப் போலவே மூளையும் உடம்பும் ஒருங்கிணைந்து செயல்படாமல் ஒரு மந்த நிலையிலேயே இருக்கும்.இதே போலவே சரியான தூக்கம் இல்லாத நபர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் நிறைய வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.ஏனெனில் புதிய தோல் செல்கள் தூக்கத்தின் போது மட்டுமே உற்பத்தி ஆகின்றன.

உறக்கத்தின் ஒவ்வொரு நிலையும் தோல் செல்களை புதிதாக உருவாக்கம் செய்கிறது. 
மெலடோனின்,மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் மற்றும் கார்டிசோல் என தூக்கத்திலேயே இத்தகைய சுரப்பிகள் சுரந்து நம் உடலை சரி செய்கின்றன. இந்த ஹார்மோன்கள் தோலின் மறு உருவாக்கத்திற்கு மிகவும் அவசியம், ஏனெனில் அவை தினசரி தோல் சேதத்தை சரிசெய்து, இளமை சருமத்தை பராமரிக்கின்றன மற்றும் சருமத்தை பாதுகாக்கின்றன

இதைப் போலவே  சரியான தூக்கம் இல்லாத நபர்கள்,  ஒரு விதமான சோம்பல் நிலையிலேயே எந்நேரமும் இருந்து கொண்டிருப்பார். மேலும் இவர்களால்  உணர்வுகளை சமநிலையில் கொண்டு வர முடியாமல், பதட்டம் எரிச்சல் ஆகிய நிலைகளிலேயே இருப்பர்.

தூக்கமின்மை விரக்தியான மனநிலையை உண்டு பண்ணுவதோடு ஆத்திரம் மற்றும் எதிர்மறையான மனநிலையை உருவாக்குகிறது. இதைப்போல முழுமையான தூக்கத்தை பெறாதவர்கள் வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கும் தருணங்களில் குழப்பமான மனநிலையிலேயே இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது

இது மனதளவிலான பிரச்சனை என்றால் உடலளவில் செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து தூக்கம் மட்டுமே நம்மை  பாதுகாக்கிறது. தூக்கத்தில் மட்டுமே கணையமானது ஓய்வு பெறுகிறது.இதைப்போலவே ஆழ்ந்த உலகத்தில் மட்டுமே ரத்த அழுத்தம் குறைவதுடன் இதயத்திற்கான அதிகப்படியான வேலைகள் சற்று குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. தூக்கத்தை தொடர்ந்து அவமதிக்கும் பொழுது மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளும் தீவிரமாகின்றன. இதைப் போலவே தூக்கமின்மையினால் வெளிப்புற முகத்தோற்றம் மற்றும் உடலின் தோற்றமானது மாறுபடுகிறது.

சரியாக தூக்கம் இல்லாத நபர்களுக்கு டிமென்ஷியா மற்றும் அல்சய்மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வெகு விரைவிலே வந்து விடுகின்றன. என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது மட்டும் இல்லாமல் நீரிழிவு பக்கவாதம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கும் இந்த தூக்கமின்மையே பிரதான காரணமாக இருக்கிறது. சரியான தூக்கம் இல்லாத நபர்களுக்கு உடல் எடை கூடுவதற்கான அபாயம் அதிக அளவில் இருக்கிறது.

தூக்கத்தை பாதிக்கும் காரணிகள் என்னவென்று பார்ப்போம் தூங்கும் நேரத்தை மாற்றிக் கொண்டே இருப்பதும் தூக்கத்தை பாதிக்கும் ஆகையால் இரவு படுப்பதற்கு மிகச் சரியாக ஒரு நேரத்தை தேர்வு செய்து அந்த நேரத்தில் தூங்கப்போவது சாலச் சிறந்தது

இதைப் போலவே மன அழுத்தம் வேலைப்பளு உள்ளவர்கள் தியானம் சிறிய நடை பயிற்சி போன்றவற்றை ஒரு நாளின் ஏதாவது ஒரு பகுதியில் திட்டமிட்டு கொள்ளலாம் இதன் மூலமும் உங்கள் கவலைகள் குறைந்து உற்சாகமான தூக்கம் வெளிப்படும் தூங்கப் போவதற்கு முன்னர் மிகச் சூடான அல்லது மிக குளிர்ச்சியான பானங்களையோ மற்றும் உணவுப் பொருட்களையோ தவிர்ப்பது நல்லது

உணவு உண்ணாமல் தடுப்பது  அல்லது அதிகப்படியான உணவுகளை உண்பதும் உங்கள் தூக்கத்தை வெகுவாக பாதிக்கும் . இரவு நேரங்களில் தயிர்,கீரை மற்றும் அசைவ உணவுகளை உண்பதும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி தூக்கத்தினை நமக்கு வரவிடாமல் செய்துவிடும்.இதே போலவே டிவி ,மொபைல் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை தூங்குவதற்கு  ஒரு மணி நேரத்துக்கு முன்னாவது ஒதுக்கி வைத்து விடுங்கள் இவை கண்களுக்கு அதிக வேலையை தருவதோடு உங்கள் மூளையை அதிவேகமாக செயல்படும் தன்மையில் வைத்து விடும்.

படுக்கை அறையில் சுத்தமான காற்றோட்டம் மற்றும் மெல்லிய இசை உங்கள் தூக்கத்திற்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்யும்.இதைப் போலவே தூங்குவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் சிறிது நேரம் தியானத்தில் இருப்பது கூட உங்கள் அன்றைய தின பரபரப்பு கவலைகள் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றிலிருந்து உங்கள் மனதை சாந்தப்படுத்தி தூக்கத்திற்கு இட்டுச் செல்லும்.

இவ்வாறாக ஆகச்சிறந்த, நிம்மதியான மற்றும்,குறைந்தது 8 மணி நேரமாவது தூங்குவதற்கான உடல் மற்றும் மனநிலையை உருவாக்கிக் கொள்வது மனிதர்களான நம் அனைவருக்கும் வாழ்க்கையின் மிக மிக இன்றியமையாத தேவையாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget