Weight Loss Tips: காலை உணவை தவிர்த்தால் எடை குறையுமா? - மறக்காம இதைப் படிங்க!
நம் அனைவருக்குமே காலை உணவு என்பது அவசியமாகும். ஆற்றலுடனும் செறிவுடனும் தங்கள் வேலையில் கவனம் செலுத்த எக்காரணம் கொண்டு காலையில் உணவை தவிர்க்கவே கூடாது.

நாம் உயிர் வாழ உணவு, தண்ணீர் போன்றவை அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது. கால மாற்றத்தால் நாம் நம் வாழும் மண் சார்ந்த உணவுகள் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள உணவுகளையும் விரும்பி உண்கிறோம். இவற்றை சாப்பிட்டதன் விளைவால் மிகப்பெரிய அளவில் உடல்நல பாதிப்பு தொடங்கி, அதிக எடை, சரும பாதிப்பு என பல பிரச்னைகள் உண்டாகிறது. நம்முடைய உடல் காலநிலைக்கு ஏற்ப உணவு எடுத்தால் மட்டுமே செட்டாகும் என்ற நிலையில் அதைப் பற்றிய துளி கூட கவலையில்லாமல் அனைத்து உணவுகளையும் சாப்பிடுகிறோம்.
இதன் விளைவாக வயது வித்தியாசம் இல்லாமல் எடை அதிகரிப்பு சம்பவம் நிகழ்கிறது. உடனடியாக எடையை குறைக்க நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் ஒன்று தான் காலை உணவை அறவே தவிர்ப்பது. அவ்வாறு செய்வது எடை குறைக்க உதவுமா? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதனைப் பற்றிக் காணலாம்.
காலை உணவைத் தவிர்ப்பது எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றம் குறைதல் மற்றும் மோசமான உணவு முறை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் இடைவிடாத உண்ணாவிரதம் மற்றும் தாமதமாக சாப்பிடுவது போன்ற விஷயங்கள் தற்காலத்தில் எடையைக் குறைப்பதற்கான முக்கிய வழிகளாக மாறிவிட்டன.
பொதுவாக காலை உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதேபோல் உடலின் கலோரி எரிக்கும் அமைப்பை இயக்குகிறது. இரவு நீண்ட நேரம் நாம் உணவு எடுத்துக் கொள்ளாத நிலையில் காலையில் காலை உணவை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நாள் முழுவதும் உணவு பசியைக் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது.
நம் அனைவருக்குமே காலை உணவு என்பது அவசியமாகும். ஆற்றலுடனும் செறிவுடனும் தங்கள் வேலையில் கவனம் செலுத்த எக்காரணம் கொண்டு காலையில் உணவை தவிர்க்கவே கூடாது. அதேசமயம் எடை இழப்புக்கு காலை உணவைத் தவிர்ப்பது ஒரு நல்ல வழி என்ற நிலையில் அது தினசரி கலோரி அளவை குறைக்கிறது.
விரதம் இருந்து நீராகாரம் எடுப்பது, சிற்றுண்டி அதிகம் சாப்பிடுவது மூலம் காலை உணவை தவிர்க்கவும் முடியும், எடை இழப்பை பராமரிக்கவும் முடியும் என சொல்லப்படுகிறது. மேலும் சிலர் எடையைக் குறைக்க காலை உணவைத் தவிர்த்துவிட்டு, மதிய உணவில் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். இரவிலும் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். இது கொழுப்பை அதிகரித்து எடை அதிகரிப்பை கூட்டுகின்றது.
நீங்கள் காலை உணவை தவிர்க்கலாமா, வேண்டாமா என்பதை விட்டு விட்டு உணவு தரம், உணவு நேரம், தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை உணவை தவிர்ப்பது நல்ல பழக்கம் கிடையாது. மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டு அதனை தொடருங்கள்.





















