Rice: இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத அரிசி! தினம்தினம் உணவாகும் அரிசியின் கதை!
அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக இருந்து வருகிறது.
உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அரிசியை வெவ்வேறு வகைகளில் உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி, நம் உணவுமுறையில் அரிசி ஒரு முக்கிய உணவுப் பொருளாக இருப்பதற்கு என்ன காரணம்? இந்தியாவில் நாட்டுப்புறப்பாடல்களில் பெரும்பாலானவை நெல் பயிரிடுவதைப் பற்றியும்,அதன் அறுவடை பற்றியுமே இருக்கும். ஏனென்றால், இந்தியாவில் ஆண்டும் முழுவதும் மக்கள் உட்கொள்ளும் உணவு வகைகளில் முதலிடம் வகிப்பது அரிசிதான். அரிசி சார்ந்த உணவுகள்தான் டயட்டில் இருக்கும்.
இந்தியா வரலாற்றில் எப்போதும் விவசாய நாடாகவே இருந்திருக்கிறது. நெல் விதைப்பது, அதை அறுவடை செய்வது, அதிலிருந்து அரிசி தயாரிப்பது உள்ளிட்டவைகளில் உணவு உற்பத்திகளை மக்கள் மகிழ்ச்சியுடன் செய்திருக்கிறார்கள்.
View this post on Instagram
இந்தியாவில்தான் அரிசி உற்பத்தி தொடங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நெல் அறுவடை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கடந்த 20 ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையின் சான்றுகள் தெரிவிக்கின்றன.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சண்ட் கபீர் நகர் ,Lahuradewa பகுதியில் நெல் சாகுபடி செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தது பற்றி அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பிரிவு பேராசிரியர் ஜே.என்.பால் (JN Pal) தெரிவிக்கிறார்.
கி.மு. 9000 – கி.மு.8000 ஆண்டுகளுக்குள் Lahuradewap-வில் ஜூஷி (Jhusi) என்ற இடத்தில் நெல் பயிரிடப்பட்டதற்கான அடையாளங்கள் அப்பகுதியை தோண்டி ஆராய்ச்சி மேற்கொண்டபோது தெரியவந்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மேலும், அரிசி இந்தியாவில் மதம் சார்ந்த ஒன்றும் கூட. அரிசியை “Akshat" என்று சொல்லும் வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது. பலரும் பலவேறு முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களில் அரிசி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், அறுவடை காலங்களில் பொங்கள் செய்யும் வழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்