Sperm Count | விந்தணுக்குள் குறைவா? அதனால் அழுத்தமா? இதையெல்லாம் செய்யவே செய்யாதீங்க.. ஆய்வு சொல்லும் வழிகள்..
15 மில்லியன் அளவு விந்தணுக்கள் இருக்க வேண்டும். இதிலும் 50% அளவு விந்தணுக்கள் வீரியமிக்கவையாக இருக்கவேண்டும் ..
இன்று குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்கள் 60% காரணமாக இருந்தால் ஆண்கள் 40% காரணமாக இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. ஆண்கள் மலட்டுத்தன்மைக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை குறைபாடுள்ள ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருந் தாலும் கூட கரு உருவாவதில் சிக்கல் உண்டாகும். உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே. விந்தணு குறைபாடு என்பது பிறக்கும்போது உண்டாகும் குறைபாடு அல்ல. ஆண்கள் அன்றாட வாழ்விலும் உணவு முறையில் ஏற்படுத்தி கொண்ட அதிகப்படியான மாற்றங்களின் எதிரொலிதான் விந்தணுக்கள் குறைபாட்டுக்கு பெரிய காரணம்.
ஆய்வு ஒன்றிலும் நவீன உணவு பழக்கத்துக்கு மாறிய ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளது. ஆண்களின் விந்தணுக்களானது விந்து வெளிப்படும்போது விந்தணுக்குள் வெளிப்படவேண்டும். இதில் பாதி அளவிலேயே 15 மில்லியன் அளவு விந்தணுக்கள் இருக்க வேண்டும். இதிலும் 50% அளவு விந்தணுக்கள் வீரியமிக்கவையாக இருக்க வேண்டும் . இதில் 4 % வீரியம் குறைந்தவையாக இருந்தாலும் பரவாயில்லை. இவை தவிர்த்து வீரியமிக்க விந்துக்களானது கருப்பையில் வேகமாக வீரியத்தோடு ஊர்ந்து செல்லும் அளவுக்கு ஆரொக்கியமானதாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் ஆண்களுக்கு குறைபாடில்லை. இதற்கான இயற்கை முறை வழிகள் உள்ளன. அவை என்ன என்று பார்க்கலாம்.
- உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம்
உடல் பருமன் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது, அதனால் உடலை ஆரோக்கியமாக, ஃபிட்டாக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால், அதிகமாக செய்ய வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு என்ற பழமொழி உடற்பயிற்சிக்கும் பொருந்தும். எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதற்கும், கருவூட்டும், கருத்தரிக்கும் திறனுக்கும் தொடர்பு இருக்கிறது.
ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும். ஒரு ஆய்வின்படி, தினசரி 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களின் இனபெருக்க திறன் 31 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இனப்பெருக்கத்திற்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது.
- புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்
புகைபிடிப்பதன் காரணமாக ஏற்படும் மோசமான விளைவுகளில் ஒன்று, அவை ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். சிகரெட்டில் உள்ள carcinogen எனப்படும் ஒருவகை புற்றுநோயே இதற்கு காரணம். அதிகப்படியான புகைபிடித்தல் பிற கருவுறுதல் பிரச்சினைக்கு வழிவகுக்கும். இருப்பினும், ஒரு ஆண் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டால், அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை மூன்று முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் கணிசமாக மேம்படும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- அதிகமான குடிப்பழக்கத்தைக் கைவிடுங்கள்
மிதமான அளவுகளில் கூட மது அருந்துவது உங்கள் பாலியல் உந்துதலை கணிசமாக பாதிக்கும். மறுபுறம், கடுமையான மற்றும் நிலையான குடிப்பழக்கம் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை சேதப்படுத்தும் மற்றும் உங்கள் விந்தணு எண்ணிக்கையை குறைக்கலாம். இதனால் ஆண்களின் கருவுறுதல் திறன் பெருமளவில் பாதிக்கப்படலாம். அதனால் குடிப்பழக்கத்தை முடிந்த அளவு குறைத்துக்கொள்வது வளமான வாழ்வை கொடுக்கும்.
- உயிரணுக்களை குறைக்கும் மருந்துகள்
சில மருந்துகள் ஆரோக்கியமான விந்தணு உற்பத்தியைக் குறைக்கும். ஆண்கள் இந்த குறிப்பிட்ட மருந்து உட்கொள்வதை நிறுத்தியவுடன், அவர்களின் விந்தணு எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பும். விந்தணுவின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை தற்காலிகமாக குறைக்கக்கூடிய மருந்துகள் என்னவென்றால்:
- சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
- ஆன்டிஆன்ட்ரோஜன்கள்
- அழற்சி எதிர்ப்பு
- ஆன்டிசைகோடிக்ஸ்
- ஓபியேட்ஸ்
- ஆன்டி ப்ரெஸ்ஸர் மருந்துகள்
- மெத்தடோன்
- டெஸ்டோஸ்டிரோன் - உட்கொள்ளும் மருந்துகளும், வெளிப்புற உடலில் பயன்படுத்தப்படும் மருந்துகளும்
- அனபோலிக் ஸ்டெராய்டுகள் - மருந்தை நிறுத்திய பிறகு 1 வருடம் வரை விந்தணு எண்ணிக்கையை தொடர்ந்து பாதிக்கலாம்
ஆண்கள் இந்த வகை மருந்துகளை தற்போது எடுத்துக்கொண்டிருந்தால், இந்த மருந்து விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறதோ என்கிற சந்தேகம் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை பெறலாம்.
- வெந்தயம் எடுத்துக்கொள்ளுதல்
உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கு இயற்கை தீர்வாக வெந்தயம் நீண்ட காலமாக நம் பயன்பாட்டில் உள்ளது, மேலும் இது விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உண்மையில், ஒரு 2017 ஆய்வில், வெந்தய விதைகளிலிருந்து உற்பத்தியாளர்கள் உருவாக்கிய காப்புரிமை நிலுவையில் உள்ள கலவை ஃபுரோசாப், ஒட்டுமொத்த விந்து தரம் மற்றும் விந்தணு எண்ணிக்கையை கணிசமாக மேம்படுத்துகிறது.
- வைட்டமின் டி
வைட்டமின் டி ஆனது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு கால்சியல் அளவையும் விந்தணுவில் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஆண்களின் உடலில் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரின்மையை தடுக்க வைட்டமின் டி அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன. தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. இதனால் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. எனவே விந்தணு வலு இழந்தவர்கள் காலார சூரிய ஒளியில் நடக்கலாம். சந்தோசமாய் சூரியக்குளியல் நடத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
- அஸ்வகந்தா
அஸ்வகந்தா சப்ளிமெண்ட்ஸ் சில ஆய்வுகளில் விந்தணுக்களின் செறிவு அதிகரிக்கவும், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில், 40-70 வயதிற்குட்பட்ட அதிக எடை கொண்ட 43 ஆண்கள், லேசான சோர்வுடன் இருந்த அஸ்வகந்தா சாறு அல்லது மருந்துப்போலி கொண்ட மாத்திரைகளை 8 வாரங்களுக்கு தினமும் எடுத்துக் கொண்டனர். அஸ்வகந்தா சிகிச்சையானது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் ஈடுபடும் பாலின ஹார்மோனான DHEA-S இல் 18% அதிக அதிகரிப்புடன் தொடர்புடையது. மருந்துப்போலி எடுத்துக் கொண்டவர்களை விட, மூலிகையை எடுத்துக் கொண்ட பங்கேற்பாளர்கள் டெஸ்டோஸ்டிரோனில் 14.7% அதிக அதிகரிப்பைக் கொண்டிருந்தனர். கூடுதலாக, நான்கு ஆய்வுகளின் மதிப்பாய்வு, அஸ்வகந்தா சிகிச்சையானது விந்தணுக்களின் செறிவு, விந்து அளவு மற்றும் குறைந்த விந்தணு எண்ணிக்கை கொண்ட ஆண்களில் விந்தணு இயக்கம் ஆகியவற்றை கணிசமாக அதிகரித்தது. இது சாதாரண விந்தணு எண்ணிக்கை கொண்ட ஆண்களில் விந்தணுக்களின் செறிவு மற்றும் இயக்கத்தை அதிகரித்தும் உள்ளது.
- ஆன்டி-ஆக்சிடன்ட் உள்ள உணவுகள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கலின் எண்ணிக்கையை குறைக்க உதவுகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் வீக்கத்தை ஏற்படுத்தும், இதன் விளைவாக பல நோய்கள் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் உணவில் ஆக்ஸிஜனேற்ற உணவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
- கெட்ட கொழுப்புகள் தவிர்த்தல்
இதுகுறித்த நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில். அதிக கொழுப்பு உள்ள பால், சீஸ், க்ரீம் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொண்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போனது கண்டறியப்பட்டது. அதனால் தினசரி உணவில் பால் சேர்த்துக் கொள்பவராக இருந்தால் கொழுப்பு நீக்கிய பாலை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- நல்ல கொழுப்பு உணவுகள் சேர்த்தல்
ஆண்களின் உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் வடிவமும் தரமாக இருக்கும் என்கிறது ஆய்வு. மேலும் ஜங்க்ஃபுட் உணவுகளை அதிகம் எடுத்துகொள்ளும் போது விந்தணுக் களின் எண்ணிக்கை சற்று குறைந்தாலும் அவை பலவீனமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. விந்தணுக்கள் குறைபாட்டை சந்திக்காமல் இருக்கவும் விந்தணுக்களை பலமாக்கி வேகத்தை அதிகரிக்கவும் இந்த மாதிரி யான உணவுகளை எல்லாம் தவிர்க்காமல் எடுத்துகொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள்.
விந்தணு அதிகரிக்க உட்கொள்ள வேண்டிய உணவுப்பொருட்கள்:
- மாதுளம்பழம்
மாதுளையில் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், சீரான விந்து அணு உற்பத்தி மற்றும் விந்து அணு ஆரோக்கியம் மேம்படுகிறது. மாதுளையை பழமாக, பழச்சாறாக என்று எந்த வடிவில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
- லென்டில்ஸ் என்னும் பருப்பு வகைகள்
லென்டில்ஸ் எனப்படும் பருப்பு வகைகள் உடலுக்கு அதிக போலிக் அமில சத்துக்கள் கிடைக்கும். இது விந்து அணு ஆரோக்கியம் மற்றும் நீந்து சக்தியை அதிகரித்து, ஆண்மையை அதிகரிக்க உதவுகின்றன.
- புளுபெர்ரி பழங்கள்!
புளுபெர்ரி பழ வகைகளால் விந்து அணுக்களின் வடிவம், அளவு, ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கை மேம்படுகிறது
- தக்காளி
தக்காளியை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது, ஆண்களின் விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Sperm production for males...Fruit Benefit
- வால்நட் பருப்புகள்!
வால்நட் பருப்புகளை ஒரு நாளைக்கு 75 கிராம்கள் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் விந்து அணுக்களின் எண்ணிக்கையையும் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படும். உடல் எடை குறைத்தல், உடலின் செயல்பாடுகளை சீரமைத்தல் போன்ற பல விஷயங்களுக்கு உதவுகின்றன.
- பூசணிக்காய் விதைகள்!
பூசணிக்காய் விதைகள் ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. பூசணி விதைகளில் அதிகம் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், விந்து அணுக்களின் நீந்து சக்தி, வடிவம் மற்றும் விந்து அணுக்களின் அளவை சீராக பராமரிக்கிறது.
Sperm production for males...Fruit Benefit
- டார்க் சாக்லேட்டுகள்!
இவற்றில் உள்ள சில சத்துக்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் விந்து அணுக்களின் நீந்து சக்தி உள்ளிட்டவற்றை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது.
- தண்ணீர்
தினசரி மூன்று முதல் 4 லிட்டர் அளவு தண்ணீர் பருகினால் உடலில் நீர்ச்சத்து மேம்பட்டு விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் நீந்து சக்தி மேம்படுத்தப்படும். ஆண்களின் உடலில் வெப்பம் அதிகரித்தால், அதனால் விந்து அணுக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் நீர்ச்சத்து உதவும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )