Fordyce Spots : உதட்டுக்கு மேல வெள்ளை நிற புள்ளிகள் இருக்கா? ஏன்? என்ன சிகிச்சை இதுக்கு?
முதிர்ச்சி அடையும் போது, ஹார்மோன் மாறுபாடுகளால் இவை வெளியில் தெரியும் புள்ளிகள் ஆகின்றன. நமது தோலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இந்த புள்ளிகளைத் தோன்ற செய்கின்றன
ஃபோர்டைஸ் புள்ளிகள் என்பது சற்று மஞ்சளான, சருமத்தில் தோன்றும் பருக்கள். இவை உதடுகளின் ஓரத்தில், அல்லது வாயின் உள்ளே, கன்னங்களின் பின்பகுதியில், அல்லது நமது பிறப்புறுப்பின் மேற்பரப்பில் தோன்றலாம். இவை ஆபத்தற்றவை. பெரும்பாலும் வலிகள் இல்லாதவை. தனித்தனியான பருக்களாக இவை தோன்றலாம், சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடராக ஒரே இடத்தில் தோன்றலாம்.
பெரும்பாலும் இவை 1 முதல் 3 மில்லிமீட்டர்கள் அளவு கொண்ட பருக்களாகத் தான் இருக்கும். சில நேரங்களில் பெரிதாகவும் இருக்கலாம். தோல் நிறத்திலோ, மஞ்சள் நிறத்திலோ இவை இருக்கும். பிறப்புறுப்பில் தோன்றும் புள்ளிகள் சிவப்பாக இருக்கும்.
ஃபோர்டிஸ் புள்ளிகள் நமது உடலின் ஒரு பகுதியாகும். முதிர்ச்சி அடையும் போது, ஹார்மோன் மாறுபாடுகளால் இவை வெளியில் தெரியும் புள்ளிகள் ஆகின்றன. நமது தோலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இந்த புள்ளிகளைத் தோன்ற செய்கின்றன. பெரும்பாலும், நமது உடலுக்கு இவை எந்த தீங்கையும் விளைவிக்காது. ஆயினும், தோற்றக் காரணங்களுக்காக இந்த புள்ளிகளை நீக்குவதற்கும் மருத்துவ வழிமுறைகள் இருக்கின்றன. அறுவை சிகிச்சையில் தொடங்கி, லேசர் சிகிச்சை வரை சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன.
ஆனால் இந்த புள்ளிகள் தோன்றினால் மருத்துவரைப் பார்க்க வேண்டுமா? சில நேரங்களில், இந்த புள்ளிகள் அரிப்பெடுக்கலாம். அதன் தொடர்ச்சியாக இவை தொற்று ஏற்படுவதற்குக் காரணமாக அமையலாம். அப்போது நாம் மருத்துவரை சந்திக்க வேண்டும். நிறைய நேரங்களில், பிறப்புறுப்பில் தோன்றும் இந்த புள்ளிகள், உடலுறவின் மூலம் பரவும் நோய்களின் விளைவுகளாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால், அவை ஃபோர்டிஸ் புள்ளிகளாக இருக்கும் பட்சத்தில் இவை உங்கள் உடலின் ஒரு பகுதிதான். அஞ்சுவதற்கான தேவை இல்லை. ஆயினும், உடலுறவின் போது இந்த புள்ளிகள் நசுங்கி, இரத்தம் வருவது மாதிரியான தொந்தரவுகள் இருப்பின் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
மேலும் லைஃஸ்டைல் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்