Watch Video | மீட்டிங்கில் ம்யூட்டான சுந்தர் பிச்சை! Google Meet-இல் நடந்த காமெடி.. வைரலாகும் வீடியோ...
ஆன்லைனில் மீட்டிங் அட்டெண்ட் செய்தவர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் ம்யூட்டில் வைத்தபடி மீட்டிங்கில் பேசியிருப்போம். ஆனால் இதற்கு கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சையும் விளக்கல்ல
கொரோனா பேரிடர் ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் மீட்டிங் அட்டெண்ட் செய்தவர்கள் எல்லோருமோ ஒரு கட்டத்தில் ம்யூட்டில் வைத்தபடி மீட்டிங்கில் பேசியிருப்போம். ஆனால் இதற்கு கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சையும் விளக்கல்ல என்பதுதான் இதில் ஹைலட். அண்மையில் யூட்யூபுக்காக கூகுள் மீட்டில் கெர்மிட் என்கிற பொம்மைக்குப் பேட்டியளித்த சுந்தர் எடுத்ததுமே ம்யூட்டில் பேசியதுதான் இதற்குக் காரணம்.
யூட்யூபுக்கான ‘டியர் எர்த்’ என்னும் நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையுடனான உரையாடலும் நடந்தது. இதில் புகழ்பெற்ற பொம்மலாட்டக் கதாப்பாத்திரமான கெர்மிட் தவளை (Kermit the frog) அவரைப் பேட்டி எடுத்தது.
Always remember to unmute...thanks @KermitTheFrog for joining us on @YouTube #DearEarth and chatting about some of our shared interests:) 🌎🏏🦗 https://t.co/RCIUnPcltK pic.twitter.com/cEd6BjkA6H
— Sundar Pichai (@sundarpichai) October 27, 2021
Thanks for joining us for a celebration of sustainability on @YouTube's Dear Earth yesterday! In case you missed it, here's my speech about how we can all work together to make our world better. https://t.co/i9hYpmKHGo
— Kermit the Frog (@KermitTheFrog) October 24, 2021
சுந்தர் பேசத் தொடங்கிய முதல் 11 நொடி வீடியோ ம்யூட்டில் இருந்தது.இதற்கு கெர்மிட் தவளை, ‘நான் கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையுடன் பேசுகிறேன் என்பதையும் அவர் ம்யூட்டில் பேசுகிறார்’ என்பதையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.’ என நகைச்சுவையாகச் சொன்னது. இதையடுத்து ம்யூட்டை எடுத்துவிட்டு சுந்தர் பேசத் தொடங்கினார்.
கெர்மிட்டிடம் பேசிய சுந்தர் பிச்சை ’ம்யூட்டில் பேசியதற்கு மன்னிக்கவும் கெர்மிட்.நான் இதுபோல இந்த வருடம் நிறைய முறை செய்துவிட்டேன். இந்தப் பேட்டியில் தனக்கு பிடித்த யூட்யூப் வீடியோக்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டார் சுந்தர்.
’கொரோனா காலத்தில் நானும் எனது பிள்ளைகளும் பீட்சா எப்படி செய்வது?’ என்கிற வீடியோவைப் பார்த்தோம். இதிதவிர சயின்ஸ், ஃபுட்பால் மற்றும் கிரிக்கெட் வீடியோக்களும் பார்ப்போம்’ எனப் பேசினார்.
’ஐய்ய்ய்ய்...எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும் (பூச்சி), சாப்பிட யம்மியாக இருக்கும்!’
'ம்ம்ம்...நான் சொல்வது வேற கிரிக்கெட் (விளையாட்டு) கெர்மிட்’
என நகைச்சுவையாக முடித்துக்கொண்டார்.
சுந்தரின் இந்த வீடியோ அவரது ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.