வாஸ்து டிப்ஸ்: உங்கள் சமையலறையை இப்படி அமைத்துப் பாருங்கள்; அப்புறம் தெரியும் பலன்1
சமையலறை தான் வீட்டின் முக்கியமான ஒரு இடம். அதனால் அதை சுத்தமாகவும், அழகாகவும், அதிர்ஷ்டமாகவும் வைத்து கொள்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நம் சமயலறையில் சில படங்களை வைப்பதன் மூலம் நன்மையடையலாம்.
சமையலறை தான் வீட்டின் முக்கியமான ஒரு இடம். அதனால் அதை சுத்தமாகவும், அழகாகவும், அதிர்ஷ்டமாகவும் வைத்து கொள்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நம் சமயலறையில் சில படங்களை வைப்பதன் மூலம் நன்மையடையலாம்.
என்றுமே நம் சமயலறையில் அன்னபூரணி அன்னை நிலையாக தங்கி இருக்க வேண்டும். அதனால் அன்னை அன்னபூரணியின் படம் இருக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களின் அழகான படத்தையும் வைக்க வேண்டும். இந்த படங்களை வீட்டின் சமயலறையில் வைக்கும் போது வீட்டில் உணவுக்கும், பணத்துக்கும் என்றுமே பஞ்சம் வராது என நம்பப்படுகிறது. தானியங்கள் எல்லாம் வீட்டில் என்றுமே நிறைந்திருக்கும். மேலும் வீட்டில் செழிப்பும் மகிழ்ச்சியும் பொங்கும். பற்றாக்குறை என்பது என்றுமே வராது என நம்பப்படுகிறது
1 நெருப்பு மற்றும் நீர் ஆகியவை சமையலறையின் அடிப்படை கூறுகள் ஆகும். சமையலறை எப்பொழுதும் கிழக்கு அல்லது தென்கிழக்கை நோக்கியே இருக்க வேண்டும். இது அனைவரது, குறிப்பாக பெண்களின் ஆற்றலையும் அதிகரிக்கும். செரிமானத்தையும் மேம்படுத்தும்.
2 பாத்திரம் கழுவும் தொட்டி வடக்கு அல்லது வடகிழக்கு நோக்கியிருப்பது வீட்டில் பண வரவை அதிகரிக்கும்.
3 சுவரின் வண்ணம் நடு நிலை வெள்ளை அல்லது ஐவரி வெள்ளையாக இருக்க வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு அல்லது பீச் ஆகிய நிறங்களையும் பயன்படுத்தலாம். வாஸ்துவின் பிரகாரம் மரவேலைகளே சிறந்தது.
4 குப்பைத் தொட்டி வடமேற்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும். அப்போதுதான் மனதில் உள்ள குப்பைகளும் விலகும்.
5- உங்கள் சமையலறையை இரவில் சுத்தமில்லாமல் விட்டுச் செல்லாதீர்கள். தூங்கும் முன்னர் எல்லா பாத்திரங்களையும் சுத்தமாக கழுவி வைத்துவிட்டு உறங்குங்கள். இல்லாவிட்டால் அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும் .
6. உங்கள் கேஸ் ஸ்டவ்வின் பர்னர்களில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
7. சமையலறையில் உள்ள குழாய்களை நன்றாக மூடிச் செல்ல வேண்டும். அதிலிருந்து தண்ணீர் சொட்டும்படி வைத்தால் அது நிதி இழப்பை ஏற்படுத்தும். மின் சாதனங்களை தென் கிழக்கு நோக்கி வைத்தல் நலம் தரும்.
8. அரிசி, பருப்பு போன்ற பொருட்களை தெற்கு அல்லது மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.
9. சமையலறையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அதிக பாரம் இருக்கக் கூடாது. கேஸ் அடுப்பை கிழக்கு அல்லது தென் கிழக்குப் பகுதியில் வைக்க முடியவில்லை என்றால் அங்கே ஒரு விளக்கேற்றுங்கள்.
10. பாத்திரம் கழுவும் தொடி வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.
11. தண்ணீரையும் நெருப்பையும் ஒரே சமநிலையில் வைக்காதீர்கள்.
12. கழிவறைக்கு மேல் பகுதியிலோ அல்லது அதற்குக் கீழ் பகுதியிலோ சமையலறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நாம் அனைவரும் ஓடி ஓடி உழைப்பதன் காரணம் என்ன? நம் குடும்பம் எப்போதுமே செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும்
ன்ற ஒரே ஒரு காரணத்தால் தான். நாம் வசிக்கும் வீடு வாஸ்து சாஸ்திர படி இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் வாடகை வீட்டிலோ அல்லது கட்டிய வீட்டை வாங்கினாலோ சில சமயங்களில் இதை நம்மால் சரி செய்ய முடியாது. அது போன்ற நேரங்களில் சில வழிமுறைகளை நாம் செய்வதன் மூலம் நம்மால் ஓர் அளவிற்கு நன்மை அடைய முடியும். பொதுவாக சமையலறை என்பது சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த ஒரு இடம். அங்கு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேன்மை அடையலாம் என நம்பப்படுகிறது. அந்த வகையில் நம் சமயலறையில் சில படங்களை வைப்பது மூலம் நம்முடைய செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்க முடியும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறை எப்போதுமே சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லமல் காய்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதை பின்பற்றாவிட்டால் செல்வம் குறைந்து வறுமை ஏற்படும். தண்ணீர் எப்போதுமே சிந்த கூடாது என கருதப்படுகிறது