மேலும் அறிய
Tamilnadu Roundup: குழு அமைத்த திமுக, ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள், அதிரடி காட்டிய தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : X
- சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக. எம்.பி டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு.
- சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது மதிமுக.
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பரப்புரை, சென்னையை அடுத்த ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளில் இன்று மாலை நடைபெறுகிறது.
- பாரத்தை இறக்கி வைத்தார்களா..? பேரத்தை பேசினார்களா..? விஜயகாந்த் விரும்பாத கூட்டணியை பிரேமலதா அமைத்துள்ளார்..! என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்.
- திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு சீமான் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
- வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மாணவர்கள், குறிப்பாக பெண்களுக்கு தமிழ்நாட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்தால், பெற்றோர்கள் வருத்தம் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறார்கள் என, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு ரூ.260 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,680-க்கும் ஒரு சவரன் ரூ.1,17,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290-க்கு விற்பனை.
- மீஞ்சூர் - பழவேற்காடு சாலையில் 5 அரசு பேருந்துகளை சிறைபிடித்து தத்தமஞ்சி கிராம மக்கள் போராட்டம். தங்கள் கிராமத்திற்கு ஒரு வாரமாக குடிநீர் விநியோகிக்கவில்லை எனவும் கூறி சாலையை மறித்ததால் பரபரப்பு.
- மயிலாடுதுறையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து இரண்டு நாட்களிலேயே மூடப்பட்டதால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பு. அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு.
- தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, உதகை மலை ரயிலின் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல் வகுப்பு சாதாரண கட்டணம் ரூ.520-ல் இருந்து ரூ.550-ஆகவும், முன்பதிவு முதல் வகுப்பு ரூ.600-ல் இருந்து ரூ.630-ஆகவும் உயர்வு.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























