Gold and silver rate today : அடப்பாவிகளா... ஒரே நாளில் 20,000 ரூபாய் உயர்வா .! ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில் இன்று சரசரவென உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு இன்று 2,080 ரூபாயும், வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாயும் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை நிலவரம்
தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது கடந்த மாதம் 1.34 லட்சத்தை எட்டியது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 16ஆயிரம் ரூபாய் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அடுத்தடுத்த தினங்களில் தங்கத்தின் விலையானது குறைந்தது. இருந்த போதும் ஒரு நாள் 1000 ரூபாய் குறைந்தால் மறுநாள் 1500 ரூபாய் அதிகரிப்பு என்ற நிலையில் தான் உள்ளது.
5 நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம்
- தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாள் பிப்ரவரி 16-ம் தேதி, கிராமிற்கு 120 ரூபாய் குறைந்தும், ஒரு சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 1,15,520 ரூபாய்க்கும் விற்பனை.
- 17ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 14ஆயிரத்து 320 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை.
- 18ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 90 ரூபாயும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனை
- 19ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், சவரனுக்கு 2,160 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
- 20ஆம் தேதி தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 14,420 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 540 ரூபாய் குறைந்து 1,15,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களில் ஏறி இறங்கு பல மாற்றங்களை சந்தித்தது. அந்த வகையில் இன்று வாரத்தின் இறுதி நாள் தங்கம் விலை சரசரவென அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 260 ரூபாய் உயர்ந்து 14,680 ரூபாய்க்கும், சவரனுக்கு 2080 ரூபாய் அதிகரித்து 1,17,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போலவெள்ளியின் விலையும் இன்று ஒரே நாளில் 20 ரூபாய் அதிகரித்து 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 20ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.























