மேலும் அறிய

Trump on India Deal: “இந்தியாவோட டீல் தொடரும்“ - ட்ரம்ப் உறுதி; ஆனா மறுபடியும் மோடிய வம்புக்கு இழுத்துட்டாரே.!

இறக்குமதி வரி ரத்துக்கு மத்தியில், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடரும் என ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். ஆனால், அதை பேசிவிட்டு, மீண்டும் பிரதமர் மோடியை வம்பிழுக்கும் வேலையை செய்துள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்க உச்சநீதிமன்றம் நேற்று, உலக நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த கடுமையான இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது எனக் கூறி, அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா உடனான வர்த்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது, அது அப்படியே தொடரும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அதோடு, மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

“இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடரும்“

அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா உடனான தனது உறவு 'அருமையானது' என்றும், வாஷிங்டன் மற்றும் புதுடெல்லி இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றும் கூறியுள்ளார். 

இது குறித்து பேசிய அவர், இந்தியாவுடனான தனது உறவு அற்புதமானது என்று தான் நினைப்பதாகவும், “நாங்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்கிறோம். இந்தியா ரஷ்யாவிலிருந்து வெளியேறியது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் பெற்று வந்தது. ஒவ்வொரு மாதமும் 25,000 பேர் இறக்கும் அந்த பயங்கரமான போரை நாங்கள் தீர்த்து வைக்க விரும்புவதால், அவர்கள் எனது வேண்டுகோளின் பேரில் பின்வாங்கினர்," என்று கூறினார். 

மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து பேசிய ட்ரம்ப்

தொடர்ந்து பேசிய ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பிணைப்பு "சிறந்தது" என்று வலியுறுத்தினார். பின்னர், கடந்த கோடையில், வரிகளை பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.

அது குறித்து பேசிய அவர், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரையும் நான் நிறுத்தினேன். உங்களுக்குத் தெரியும், 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்தப் போர் நடந்து கொண்டிருந்தது, அநேகமாக அணு ஆயுத போராக மாற இருந்தது. நேற்றுதான், பாகிஸ்தான் பிரதமர், அதிபர் ட்ரம்ப் அவர்களை(இந்தியா) நிறுத்தச் சொல்லி, 35 மில்லியன் உயிர்களை காப்பாற்றினார் என்று கூறினார்," என்று தெரிவித்தார்.

மேலும், தான் பெரும்பாலும் வரிவிதிப்புகளை வைத்து தான் இதைச் செய்தேன் என்று கூறிய அவர், “பாருங்கள், நீங்கள் சண்டையிடப் போகிறீர்கள், அது பரவாயில்லை, ஆனால் நீங்கள் அமெரிக்காவுடன் வணிகம் செய்யப் போவதில்லை. மேலும், நீங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் 200 சதவீத வரியை செலுத்தப் போகிறீர்கள்“ என்று கூறியதாகவும், பின்னர் அவர்கள் போன் செய்து, 'நாங்கள் சமாதானம் செய்துவிட்டோம்' என்று சொன்னார்கள்," என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.

ட்ரம்ப் இவ்வாறு கூறுவது ஒரு தொடர்கதையாக இருக்கிறது. இந்தியா பல முறை மறுத்தும், அவர் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். இதற்கு, பிரதமர் மோடியே நேரடியாக பதில் அளித்தால் தான், இந்த விவகாரம் முடிவுக்கு வரும் போல் இருக்கிறது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தாக்குதலை நிறுத்துகிறது ஈரான்! ஆனால்
தாக்குதலை நிறுத்துகிறது ஈரான்! ஆனால் "சரணடைய மாட்டோம்" அதிபர் பெசெஷ்கியன் அதிரடி
India US Oil: ”சொல்வதை செய்யும் இந்தியா” பிரதமர் மோடியை போட்டு கொடுத்த ட்ரம்ப் டீம்? - ரஷ்ய ஆயில்
India US Oil: ”சொல்வதை செய்யும் இந்தியா” பிரதமர் மோடியை போட்டு கொடுத்த ட்ரம்ப் டீம்? - ரஷ்ய ஆயில்
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி, ஈரான் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
“உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Embed widget