Uppu Seedai Recipe : குழந்தைகளோட ஸ்னாக்ஸ் பாக்ஸ் ஐடியா.. உப்பு சீடை எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம் வாங்க...
சுவையான உப்பு சீடை ஈசியா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
சீடை என்றாலே நாம் எல்லோருக்கும் கிருஷ்ண ஜெயந்தி தான் நியாபகத்திற்கு வரும். ஆனால் பண்டிகை காலங்கள் மட்டும் அல்லாமல் மற்ற நாட்களிலும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்-க்கு பொருத்தமானது சீடை. உப்பு சீடை சாப்பிடுவதற்கு மொரு மொருவெனவும் சாஃப்டாகவும் இருக்கும். வாங்க உப்பு சீடையை எப்படி ஈசியாக செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நைசாக இருக்கும் அரிசி மாவு – 1 கப், உளுந்து மாவு – 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், எள்ளு -1 ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை, தேவையான அளவு எண்ணெய்.
உளுந்து பருப்பை கடாயில் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த உளுந்தை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரைத்த அரிசி மாவை, ஒரு முறை கடாயில் போட்டு, 2 நிமிடங்கள் சூடுபடுத்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அரிசி மாவு உளுந்து மாவு, இரண்டு மாவையும் சல்லடையில் போட்டு நன்றாக சல்லித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மாவில் கட்டிகள் இருந்தால், கட்டாயமாக சீடை செய்யும்போது அது வெடிக்க வாய்ப்புள்ளது. எனவே மாவில் கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
சல்லித்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயப்பொடி, எள்ளு பெருங்காயத் தூள் ஆகிய எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சீடை செய்ய மாவு தயாராக உள்ளது. இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். மாவை லேசாக விரல்களாலேயே உருட்டலாம். மிகவும் அழுத்தம் கொடுத்து மாவை உள்ளங்கைகளில் வைத்து உருண்டைகளாக உருட்டும் போதும், சீடை வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சீடையில், லேசாக ஆங்காங்கே வெடிப்பு இருந்தாலும் பிரச்சனையில்லை. சீடை வெடிக்காமல் வரும்.
உருட்டி வைத்துள்ள சிறிய சிறிய உருண்டைகளை இப்போது எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சீடை கிடைக்கும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை எண்ணெயில் போட்டு சிவக்கும் அளவுக்கு வேகவைத்து எடுத்தால் சுவையான சீடை தயார்.
மேலும் படிக்க