ஷாப்பிங் செய்றது இஷ்டமா உங்களுக்கு.! தென்னிந்தியாவில் தவறவிடக்கூடாத ஷாப்பிங் ஸ்பாட்ஸ்!
வட இந்தியா ஒருவிதத்தில் அழகு என்றால் தென்னிந்தியா இன்னொரு விதத்தில் அழகால் ஈர்க்கக்கூடியது. ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா, தெலங்கானா சேர்ந்ததுதான் தென்னிந்தியா.
வட இந்தியா ஒருவிதத்தில் அழகு என்றால் தென்னிந்தியா இன்னொரு விதத்தில் அழகால் ஈர்க்கக்கூடியது. ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், கேரளா, தெலங்கானா சேர்ந்ததுதான் தென்னிந்தியா.
தி நகர், சென்னை, தமிழ்நாடு:
தமிழகம் சென்றால் தலைநகர் சென்னை செல்லாமல் வந்துவிடாதீர்கள். அதுவும் உங்களுக்கு ஆடை, அணிகலன்கள் மீது கொள்ளை பிரியம் இருந்தால் சென்னை தியாகராய நகர் செல்லாமல் இருந்துவிடாதீர்கள். கைத்தறி காஞ்சிபுரம் சேலை தொடங்கி பிளாட்ஃபார்மில் சாதாரண ஃபேப்ரிக் வரை ரகரகமாக துணிகள் கிடைக்கும். பாண்டி பஜார், பனகல் பார்க் எல்லாமே ஃபேஷன் ஆடைகளுக்கும், லேட்டஸ்ட் ஜுவல்லரிக்கும் பெயர் போனவை. சென்னையின் எல்லா பகுதியில் இருந்து தி நகருக்கு எளிதில் செல்லலாம்.
ஊட்டி, தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் நீங்கள் தவறவிடாமல் பார்க்க வேண்டிய இன்னொரு இடம் ஊட்டி. தேயிலை தோட்டங்களும், காபி எஸ்டேட்களும் உங்களை வரவேற்கும். இயற்கை எழில் கொஞ்சம் ஊட்டியை சுற்றிப்பார்க்காமல் தமிழக பயணத்தை முடித்துவிடாதீர்கள்.
பெங்களூரு கமர்சியல் ஸ்ட்ரீட், கர்நாடகா:
இதனை செல்லமாக ஷாப்பஹாலிக்ஸின் சொர்க்கபுரி என்பார்கள். அதாங்க விதவிதமா அதுவும் புதுவிதமா பொருட்களை ஷாப் செய்வது சிலருக்கு மிகவும் பிடித்த வேலையாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பெங்களூரு கமர்ஷியல் தெரு ரொம்பவே நல்ல சாய்ஸ். பேரம் பேசி வாங்கும் திறன் மட்டும் உங்களுக்கு இருந்தால் ஒருகை பார்த்துவிடலாம்.
லாட் பஜார், ஹைதராபாத், தெலங்கானா:
நீங்கள் முத்துக்களை நேரில் பார்த்துள்ளீர்களா? லாட் பஜாருக்குச் செல்லுங்கள். இதை நவாப்களின் நகரம் எனக் கூறுகிறார்கள். இங்கே சென்று வரும்போது முத்துக்களை வாங்காமல் வரமாட்டீர்கள். இங்கே முத்து, பவளம், தங்க நகைகள் நிறைந்திருக்கும். இந்த சந்தையில் நிறைய உள்ளூர் உணவு வகைகளும் இருக்கும். ருசியாக சாப்பிட குஷியாக ஷாப்பிங்க் செய்ய லாட் பஜார் நல்ல சாய்ஸாக இருக்கும்.
மேற்கூறிய இடங்கள் எல்லாம் வெறும் டீஸர் ரகம் தான். தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும், வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலங்களும், கோயில்களும், ஷாப்பிங் ஹப்களும் நிறைவாகவே இருக்கின்றன.
ரயில்வே துறையின் அறிவிப்பு:
அண்மையில் கூட தென்னிந்தியாவிற்கான சிறப்பு சுற்றுலா திட்டம் ஒன்றை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி, கொச்சி, குமரகோம், மதுரை, மூணாறு, ராமேஸ்வரம், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்கலாம். ராமேஸ்வரம், மதுரை மற்றும் கேரள பகுதிகளுடன் இணைந்த இந்த சுற்றுலா திட்டமானது 7 இரவுகள் மற்றும் 8 பகல்களை கொண்டது ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் தரிசனம் செய்யலாம். இந்த சுற்றுலா திட்டமானது ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இதை தொடர்ந்து மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், குமரகோனம், மூணாறு, கொச்சி, ஜெய்ப்பூர் என்ற வரிசையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் தங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.49,550 வசூல் செய்யப்படும். இது ஜிஎஸ்டி வரி உள்ளடக்கியதாகும். இது பயணக் கட்டணங்கள் மட்டுமே.