Tips Save LPG Gas :இல்லத்தரசிகளே கேஸ் வீணாகாமல் இருக்கணுமா?.. பர்னரை சுத்தம் செய்வது இவ்வளவு ஈசியா..டிப்ஸ் இதோ!
கேஸ் ஸ்டவ் பர்னரில் உள்ள அடைப்புகளால் கேஸ் ஸ்டவ் நன்றாக எரியாது. பர்னரில் உள்ள அடைப்புகளை நீக்க எளிய டிப்ஸ்.
சிலர் வீடுகளில் சமையல் கேஸ் வெகு விரைவில் காலியாகி விடும். இதனால் இல்லத்தரசிகள் குறைவாகதானே சமைக்குறோம் ஏன் கேஸ்(gas) சீக்கிரம் தீர்ந்து விடுகிறது என்று குழம்பி விடுகின்றனர். இன்னும் சிலர் அதிகமாக சமைத்தாலும் அவர்களுக்கு கேஸ் (gas) நீண்ட நாட்களுக்கு வருவது உண்டு. இதற்கு முக்கிய காரணம் உங்கள் கேஸ் ஸ்டவ்வில் உள்ள பர்னர்( burner) தான். கேஸ் ஸ்டவ்வில் உள்ள பர்னரில் துளைகள் இருக்கும். பால், சாதல் உள்ளிட்டவை பொங்கினால் அவை பர்னரில் தான் வழியும். அவை காய்ந்து பர்னரில் உள்ள துளைகள் அடைத்துக் கொள்ளும். இதை நாம் சுத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்தினால், அடைப்பு காரணமாக சிலிண்டரில் இருந்து வரும் முழு எரிவாயுவும் எரிவதில்லை.
இதனால் கேஸ் வீணாகிறது. எனவே நாம் பால் உள்ளிட்ட பொங்க கூடிய பொருட்களை கேஸ் ஸ்டவ்வில் வைக்கும் போது அதை பொங்கி வழியாமல் கவனமாக பார்த்துக் கொள்வது சிறந்தது. ஒருவேளை பால் உள்ளிட்ட பொருட்கள் பர்னரில் வழிந்து விட்டால் அதை அவ்வப்போது சுத்தம் செய்வது நல்லது. இப்போது நாம் பர்னரில் உள்ள அடைப்புகளை எப்படி எளிமையான டிப்ஸ்களை பயன்படுத்தி நீக்குவது என்பது குறித்து தான் பார்க்க போகின்றோம்.
பர்னரில் அடைப்பு இருந்தால், அந்த பர்னரை ஒரு பாத்திரத்தில் போட்டு பர்னர் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின் அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா(backing soda) சேர்த்து ஒரு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட வேண்டும். இதை அரை மணிநேரம் ஊற விட வேண்டும். நன்றாக ஊறியதும். ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் பாதியை எடுத்து சோப்பு தூளில் அதை தொட்டு பர்னரை பாத்திரம் தேய்ப்பது போல் தேய்க்க வேண்டும்.
பர்னரில் உள்ள அனைத்து துளைகளின் மீதும் படும் படி நன்றாக தேய்த்துக் கொடுக்க வேண்டும். பின் அதை சுத்தமான தண்ணீரில் கழுவி எழுத்துக் கொள்ள வேண்டும். இந்த பர்னரை உலர வைத்து கேஸ் ஸ்டவ்வில் பொருத்தி பயன்படுத்தலாம். இப்போது உங்கள் பர்னர் நன்றாக எரியும். சமையல் வேலைகள் ஆரம்பித்ததும், முன்பை விட சற்று சீக்கிரமே வெந்து விடும்.
மேலும் படிக்க
Valentine's Day 2024:காதலர் தின கொண்டாட்டம்; அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்க சில டிப்ஸ்!
Menopause: மெனோபாஸ் காலத்தில் சூரிய ஒளி ஏன் முக்கியமானது? நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!