Menopause: மெனோபாஸ் காலத்தில் சூரிய ஒளி ஏன் முக்கியமானது? நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!
Menopause: மாதவிடாய் சுழற்சி நின்றுப்போகும் காலத்தில் வைட்டமின் டி -யின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் சொல்லும் விளக்கத்தை காணலாம்.
மாதவிடாய் சுழற்சி நின்றுப்போகும் காலத்தில் (மெனோபாஸ்) சூரிய ஒளி, வைட்டமின் டி மிகவும் அவசியமாகிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மெனோபாஸ்:
ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி நின்றுப்போவது ஆங்கிலத்தில் மெனோபாஸ் (Menopause) என்றழைக்கப்படுகிறது. 45- 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் இது நிகழும். ஆனாலும், ஒவ்வொரு பெண்களின் ஒவ்வொரு வயது, மரபணு உள்ளிட்ட காரணங்களால் மாறுபடும் என்கின்றனர் மருத்துவர்கள். இது பூப்படைதல் போலவே இயல்பானது. மெனோபாஸ் காலத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். உடல்நலன், வயது அதற்கேற்றவாறு மெனோபாஸ் அறிகுறிகள் மாறும்.
மனசோர்வு, உடற்சோர்வு உள்ளிட்டவைகள் ஏற்படும். சத்தான உணவு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்தால் மட்டும் ஆரோக்கியமான காலமாக இருக்கும். மெனோபாஸ் காலத்தில் அவருடன் இருப்பவர்கள் / குடும்பத்தினர் கூடுதல் அக்கறையுடன் இருக்கலாம்.
உடல் வெப்பநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவது திடீரென உடல் வெப்பம் அதிகரிப்பது, தூக்கமின்மை, தூங்குவதில் சிக்கல், மிகுந்த குளிர்ச்சியை உணர்தல், பிறப்புறப்பில் வறட்சி, அதீத முடி உதிர்தல் உள்ளிட்டவைகள் ஏற்படுவது பொதுவானது.
மாதவிடாய் நின்று போதலுக்கு முந்தைய கட்டம், மாதவிடாய் நின்றுபோதல், மாதவிடாய் நின்று போதலுக்கு பிந்தைய கட்டம் ஆகிய மூன்றுக்கும் ஒரு சில அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக இருக்கும். 12 மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என்பதற்கு பிறகு வரும் கட்டம் போஸ்ட் மெனோபாஸ். ஒவ்வொரு கட்டத்திலும் தனிப்பட்ட நபர்கள் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.
வைட்டமின் டி முக்கியம்
மெனோபாஸ் நேரத்தில் உடலுக்கு வைட்டமின் டி மிகவும் அவசியமானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைவிட சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. சூரிய ஒளி உடலில் ’Cortisol’ சுரப்பதை தூண்டுகிறது. வைட்டமின் டி கிடைப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சோர்வாக இருக்கும் உணர்வையும் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பதால் கிடைக்கும்.
முதுகுவலி, தசைவலி, உடல் வலி காரணமே இல்லாமல் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இவற்றை அலட்சியப்படுத்தும் போது எலும்புகள் வலுவிழக்கும். இதை தவிர்க்கவே சூரிய ஒளி உடலின் முதுகு, கழுத்து பகுதிகளில் படும்படி இருப்பது நல்லது.
உணவு முறை
புரதம் நிறைந்த உணவுகள், பருப்பு வகைகள் அதிகம் டயட்டில் இருப்பதை உறுதி செய்யவும். இதில் ஈஸ்ட்ரோஜன் சத்து அதிகம் இருக்கும். கிட்னி பீன்ஸ், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். போதுமான தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி போன்றவற்றால் மெனோபாஸின் விளைவுகளை சற்று சமன் செய்ய முடியும்.
வைட்டமின் -டி ஏன் முக்கியம்?
வைட்டமின் டி உடலில் கால்சியம் சத்து உறிஞ்சுவதற்கு முக்கியமாக உள்ளது. ஆனால் அதன் குறைபாடு சோர்வு, மனநிலை தொந்தரவு, முடி உதிர்தல், எலும்பு மற்றும் மூட்டு வலி, சோர்வு ஆகியவற்றை அதிகரிக்கிறது. முதுகு மற்றும் நீண்ட எலும்புகள் கொஞ்சம் வளைந்தாலும் கூட எலும்பு முறிவு நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கின்றனர்.
காளான், முட்டை, சால்மன் வகை மீன் உள்ளிட்ட உணவுகளில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. உணவு, சப்ளிமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் வைட்டமின் டி-யை விட சூரிய ஒளியில் இருந்து கிடைப்பதில் திறன் அதிகம் உள்ளது. தினமும் காலை 10 .30 மணி முதல் 12 மணிக்குள் நேரத்தில் பத்து நிமிடங்களாவது உடலில் வெயில்பட அனுமதியுங்கள். அதிக சன்ஸ்க்ரீன் க்ரீம்களை பயன்படுத்த வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.