இதய அறுவை சிகிச்சை செய்தவரா... கண்டிப்பாக இவற்றை பின்பற்றுங்கள்!
இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர் ஆரோக்கியமான உணவுகளை பரிந்துரை செய்வார்கள். அறுவை சிகிச்சைக்கு பிறகு குறைந்தது ஆறு மாதங்கள் வரை தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்க வேண்டும்.
இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர் ஆரோக்கியமான உணவுகளை பரிந்துரை செய்வார்கள். அறுவை சிகிச்சைக்கு பிறகு குறைந்தது ஆறு மாதங்கள் வரை தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்க வேண்டும். அதனால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை புண்கள் ஆறுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தகுந்தவாறு உணவை எடுத்து கொள்ள வேண்டும்.
இதய நோய்கள் - இதய நோய்கள் வருவதற்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, மனஅழுத்தம், முறையற்ற உணவு பழக்கம் மற்றும் உடல் உழைப்பில்லாத வாழ்வியல் முறையை பின்பற்றுவது, உடற்பயிற்சியின்மை, போன்ற காரணங்களினால் இதய நோய்கள் வருகிறது. ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றினால் இவை வராமல் தடுக்க முடியும்.
இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்
கொழுப்பு பல வகைகள் உள்ளன. உடலுக்கு நல்லது செய்யும் நல்ல கொழுப்பு, மற்றும் கெட்ட கொழுப்பு என எளிமையாக வகைப்படுத்தலாம். அதாவது ஹை டென்சிட்டி லிப்போப்ரோடீன், மற்றும் லோ டென்சிட்டி லிப்போப்ரோடீன். உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு மிகவும் அவசியம். கொழுப்பு ஆற்றலாக மாற்ற படுகிறது. இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள கூடாது.
உப்பு குறைத்து கொள்ள வேண்டும் - இயற்கையாகவே சாப்பிடும் உணவில் சோடியம் இருக்கிறது. பொதுவாக உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு உப்பு குறைத்து சாப்பிட வேண்டும். இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு அளவான உப்பு எடுத்து கொள்வது நல்லது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள்
- ஆழ்ந்த தூக்கம் அவசியம். இது அறுவை சிகிச்சைக்கு பிறகு விரைவில் மீண்டு வர உதவியாக இருக்கும்.
- உடற்பயிற்சி அவசியம். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு படிப்படியாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- வயிறு முட்ட சாப்பிட வேண்டாம். அளவை குறைத்து சாப்பிட வேண்டும்.
- வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
- இதய துடிப்பை சீராக வைத்து கொள்ள ஆரோக்கியமான பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்
அறுவை சிகிச்சைக்கு பிறகு தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
- அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- புகை பிடித்தல், ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- பதப்படுத்த பட்ட உணவுகள்,ஜங்க் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- மனஅழுத்தம் தவிர்க்க வேண்டும்