பெண்கள் கவனத்திற்கு! நீளமான அடர்த்தியான கூந்தல் வேண்டுமா..? உங்களுக்கு முட்டைதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்!
நல்ல நீளமான அடர்த்தியான கூந்தலை யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால் காலநிலை மாற்றம், காற்று மாசு ஆகிய காரணங்களால் நீளமான அடர்த்தியான கூந்தல் பெரும் சவாலாகிவிட்டது.
நல்ல நீளமான அடர்த்தியான கூந்தலை யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால் காலநிலை மாற்றம், காற்று மாசு ஆகிய காரணங்களால் நீளமான அடர்த்தியான கூந்தல் பெரும் சவாலாகிவிட்டது. அதுவும் இந்தியா போன்ற காற்று மாசு நிறைந்த நாட்டில் இது பெரும் சவால் தான். ஆனால் வீட்டிலேயே கூந்தல் பராமரிப்புக்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
முட்டைகள் கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கும். முடி உதிர்தல். கேச (கூந்தல்) வறட்சி, கேசம் வளராமல் இருத்தல் என எந்த மாதிரியான பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு முட்டை நல்ல தீர்வாக இருக்கும். முட்டையில் புரதம் அதிகம். அதுதவிர வைட்டமின்களும் அதிகம். முட்டைகளை ஊட்டச்சத்தின் பவர்ஹவுஸ் என்றாலும் அது மிகையல்ல.
stylecrase.com என்ற இணையதளம் முட்டையில் பயோடின் அதிகமாக இருக்கிறது என்றும் பயோடின் கூந்தல் வளர்ச்சிக்கு அவசியமானது என்றும் கூறுகிறது. முடி உதிர்தலை தடுப்பதோடு புதிதாக முடி வளரவும் முட்டைகள் உதவுகின்றன. இது ஜீவனிழந்த கூந்தலுக்கு புத்துயிர் தருகிறது. ஸ்ப்லிட் எண்ட்ஸ் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. கேசத்திற்கு தேவையான கெராடினை தருகிறது. முட்டையில் உள்ள புரதம் கேசத்தை மிருதுவானதாக பளபளப்பானதாக மாற்றும்.
முட்டை மாஸ்க்:
கேசத்துக்கு முட்டையால் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம். ஒரு முட்டை, ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்துக் கொள்ளவும். 20 நிமிடங்களுக்குப் பின்னர் தலையை நன்றாக அலசினால் போது கேசம் பளபளப்பாகவும் இருக்கும்.
முட்டை வாழைப்பழம் மாஸ்க்
வாழைப்பழத்தை நன்றாக மசித்து அத்துடன் ஒரு முட்டை கொஞ்சம் ஆலிவ் ஆயில் சேர்க்கவும். இதனை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். இது கேசத்திற்கு வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் தரும்.
முட்டை, வெங்காயம் மாஸ்க்
முட்டையுடன் வெங்காயச் சாறு சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
வீட்டிலேயே முட்டை ஷாம்பூ செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
- 1 முட்டை
- 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 டேபிள் ஸ்பூன் மைல்டு/ஹெர்பல்/பேபி ஷாம்பூ (நறுமணமற்றது பரிந்துரைக்கத்தக்கது)
- 1/2 கப் தண்ணீர்
செய்முறை:
மேலே கூறப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். கலந்து வைத்துள்ள இந்தக் கலவையை தலைக்கு ஷாம்பூவாகப் பயன்படுத்தவும்.
வறண்ட மற்றும் சேதமடைந்த கேசம் உள்ளவர்களுக்கு இந்த ஷாம்பூ சிறந்தது. குறிப்பாக சூரிய ஒளி அதிகமாகத் தலையில் படுவதன் காரணமாக தலைமுடி சேதம் ஏற்பட்டவர்களுக்கு, இந்த ஷாம்பூ எளிமையான தீர்வாக அமையும்.
தலைமுடி மிகவும் நீளமாக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் கூடுதலாகச் சேர்க்கவும். ஷாம்பூ எஞ்சியிருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து 36 மணி நேரத்திற்குள் பயன்படுத்திக்கொள்ளலாம்.