மேலும் அறிய

உங்க குழந்தை செல்போனும் கையுமா இருக்கா? கொஞ்சம் உஷாராகுங்க! இவ்வளவு சிக்கல் இருக்கு!

தொழில்நுட்பம் உங்கள் குழந்தைகளை சோம்பேறியாக்கிவிடும் என்று அறிக்கை வெளியாகியுள்ளது

தொழில்நுட்பம் உங்கள் குழந்தைகளை சோம்பேறியாக்கிவிடும் என்று நாங்கள் சொன்னால் நீங்கள் கோபப்படாதீர்கள். காரணம் இதை ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ள அறிக்கை.

தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ், கணினி, டேப்ளட், மோட்டார் சைக்கிள் என்று எல்லாமே விரல் நுனியிலோ அல்லது ஒரு பட்டன் ஸ்டார்ட்டிலோ இருந்தால் என்னதான் அவர்கள் பெரிதாக உடல் உழைப்பை செலுத்திவிட முடியும்.

முன்பெல்லாம் காய்கறி வாங்க, கடைக்குப் போக என்று பிள்ளைகள் வீட்டில் இருந்தால் நாள் முழுவதும் அம்மா, பாட்டி என எல்லோரும் வேலை ஏவுவார்கள். குழந்தைகளும் அப்படின்னா மிட்டாய் வாங்கிப்பேன் என்று சொல்லி அதற்காகவே ஒரு பொருளை மறந்துவைத்துவிட்டு வந்ததுபோல் நடித்து எக்ஸ்ட்ரா தின்பண்டங்களை வாங்கிக் கொள்வதும் உண்டு.
ஆனால் இப்போ அப்படியல்ல காலம் மாறிவிட்டது. அம்மா ஏதாவது கேட்டால் போதும் இன்ஸ்டாமார்ட்டில் வாங்கு மா என ஐடியா சொல்கிறார்கள். சரி இபி பில் கட்டிட்டு வா என்று சொன்னால் ஆன்லைன் பண்ணுங்க எனக் கூறுகிறார்கள். கடையில் ரெண்டு இட்லி வாங்கிட்டுவாப்பா என்றால் ஸ்விக்கி பண்ணிடு என்று சொல்கிறார்கள். ஆக எழுந்து நடப்பதே இல்லை. வீட்டுக்குள் அங்குமிங்கும் போவதற்குக் கூட ரோலிங் சேர். ரோட்டில் நடக்க ஸ்கேட்டிங் ஷூ. இந்திய ரோட்டுக்கும் கூட ஸ்கேட்டிங் ஷூவை கொண்டு வந்துவிட்டார்கள்.

இப்படியே இருந்தால் குழந்தைகள் சோம்பேறி ஆகாமல் என்ன ஆவார்கள். விளைவு உடல் பருமன், சர்க்கரை வியாத, உயர் ரத்த அழுத்தம். அப்புறம் ஜிம் ஜிம்மாக அலைவது.

இதையெல்லாம் தவிர்க்க குழந்தைகளை சுறுசுறுப்பாக சில டிப்ஸ் சொல்கிறார் ஹிமானி நருலா. இவர் கன்டினுவா கிட்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார்.

1. விளையாட இடம் ஏற்படுத்திக் கொடுங்கள்
2. குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்கினால் பரிசளியுங்கள்.
3. அவர்கள் திரை நேரத்தினை குறையுங்கள்
4. அவர்களுக்கு நல்ல முன் உதாரணமாக இருங்கள். அப்படியென்றால் நீங்கள் சுறுசுறுப்பாக, அதிக நேரம் கேட்ஜட்ஸ் பயன்படுத்தாம் இருங்கள்
5. அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை விளையாட அனுமதியுங்கள் ( வீடியோ கேம்ஸ் அல்ல)
6. சுறுசுறுப்பாக இயங்கவைக்க மாற்று வழிகளை புதிதாக யோசித்து செயல்படுத்துங்கள்.

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன்கள் கொடுத்த பின்னர், பள்ளிக்குழந்தைகளிடமும் அந்த பழக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கியது. ஆன்லைன் வகுப்புகள் முடிந்தபின்னரும் குழந்தைகள் பெற்றோர்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் ஆன்லைன் கேம் செயலிகளைத் தரவிறக்கம் செய்து விளையாடும் பழக்கம் வேகமாக தொற்றிக்கொண்டது. கொரோனா ஊரடங்கு முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும்கூட அந்தப் பழக்கம் அப்படியே பின்தொடர்கிறது. இதனால் பல்வேறு பிரச்னைகளை குழந்தைகளும், குழந்தைகள் மூலம் அவர்களின் குடும்பங்களும் எதிர்கொண்டுவருகிறது.

இதிலிருந்து தப்பிக்க மேற்கூறிய பழக்கங்களைக் கடைபிடிக்கலாம்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget