சமையலுக்கு எந்த எண்ணெய் நல்லது? ‘Seed Oils' புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துமா? ஆய்வு செல்வதென்ன?
Seed Oils: சூரியகாந்தி, நிலக்கடலை ஆகிய எண்ணெய் உணவில் அதிகமாக சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு விளைவிப்பது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
’Seed Oils' சமையலுக்கு பயன்படுத்துவது உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வின் தகவல் வெளியானது அது தொடர்பாக நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் தீவிர உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ இதழான Gut இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, சூரியகாந்தி, Grapeseed, Canola, Corn, Pumpkin Seed, Seasame, நிலக்கடலை, சோயாபீன் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தொடர்ந்து சாப்பிடுவது புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த ஆய்வில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உணவு, அவர்களின் செயல்பாடுகளில் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்கள் Seed எண்ணெய் பயன்படுத்தியதால் பயோஆக்டிவ் லிப்பிட்களின் உயர்ந்த அளவுகளைக் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 முதல் 85 வயதுடைய நபர்களிடமிருந்து 81 மாதிரிகளின் பகுப்பாய்வு புற்றுநோய் திசுக்களில் லிப்பிட்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
சூரியகாந்தி, நிலக்கடலை ஆகியவற்றில் இருந்து தயாரிகக்ப்படும் எண்ணெய்யை தொடர்ந்து சமையலில் பயன்படுத்துவதால் அது இன்ஃப்ளமேசன் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. அதோடு, சமீபத்திய ஆய்வுகள்படி, Seeds oils ப்ரேக்டவுன் ஆகும்போது உருவாகும் பயோ ஆக்டிவ் லிப்பிட்ஸ் பெருங்குடல் புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக இருப்பதுடன் ’Tumours' உருவாகும்போது அதை எதிர்த்து போராடும் தன்மையை உடல் இழந்துவிடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒமேகா-6 மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த Seed எண்ணெய், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நாட்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கு சாத்தியமான தொடர்புகள் குறித்து கூடுதல் ஆராய்ச்சி மேற்கொண்ட பிறகு தெளிவாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seed எண்ணெய் வகைகளை அதிகப்படியாக சமையலில் சேர்ப்பது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது புற்றுநோயின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் பங்களிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆய்வு தொடர்பாக கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதால் எதையும் உறுதியாக கூற முடியாது எனவும் சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உணவில் அதிக அளவு ’Seed Oils’ சேர்க்காமல் இருப்பது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாக பாக்கெட்டுகளில் இருக்கும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.