மறக்க முடியாத கிறிஸ்துமஸ் கொண்டாட இந்தியாவில் செல்ல வேண்டிய தேவாலயங்கள்

குழந்தை இயேசு பெருங்கோயில்(Basilica of Bom Jesus)

கோவாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றான கத்தோலிக்க திருச்சபை. இந்தியாவில் குழந்தை இயேசுவுக்காக அற்பணிக்கப்பட்ட முதல் கத்தோலிக்க திருச்சபை.

சாந்தோம் பேராலயம்

16ம் நூற்றாண்டில் சென்னையில் கட்டப்பட்ட ரோமானிய கத்தோலிக்க பேராலயம். அதிசயிக்க வைக்கும் வழிபாட்டு முறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட இந்த பேராலயம் சிறந்தது.

சே கதீட்ரல் (SE)

ஆசியாவிலேயே மிக பெரிய பேராலயங்களில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான மக்களின் ஒன்றிணைந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இங்கு மட்டுமே காணமுடியும்.

சேக்ரட் ஹார்ட் கதீட்ரல்

வாய் திறக்க வைக்கும் அலங்காரங்களுடன், அமைதியான கிறிஸ்துமஸ் கொண்டாட டெல்லியில் உள்ள இந்த தேவாலயம் மிகவும் சிறந்தது.

செயிண்ட் பாட்ரிக் பேராலயம்

உற்சாகமும் ஆற்றலும் நிறைந்த கிறிஸ்துமஸ் கொண்டாடத்திற்காக பெயர் போன இந்த பேராலயம் கல்கத்தாவில் உள்ளது

புனித அன்னை தேவாலயம்

கர்நானாடகாவில் உள்ள யாத்திரிகர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் அளவில் பிரம்மாண்டமாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும்.

புனித வியாகுல அன்னை திருக்கோவில்

திரிச்சூரில் அமைந்திருக்கும் சீரோ- மலபார் கத்தோலிக்க இணை பெருங்கோயில் ஆசியாவின் மிக உயரமான கோவிலில் ஒன்றாகும்.