மேலும் அறிய

Sour Spinach Thokku: சுவையான புளிச்சக்கீரை தொக்கு செய்றது இவ்ளோ ஈசியா..? வாங்க அசத்தலாம்..!

சுவையான புளிச்சக்கீரை தொக்கு எப்படி செய்வதென்று இந்த செய்தியில் பார்க்கலாம் வாங்க.

பொதுவாக கீரை வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.

கீரை வகைகளில் புளிச்சக்கீரையை ஏராளமானோர் விரும்பி உண்ணாததற்கு அதில் உள்ள அதிகப்படியான புளிப்பு சுவை தான் காரணம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில்  புளிச்சக்கீரையை செய்து பாருங்க. நிச்சயம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் 

புளிச்ச கீரை - ஒரு கட்டு

தனியா - 1 tsp

வெந்தயம் - 1/2 tsp

சீரகம் - 1/2 tsp

வரமிளகாய் - 20

எண்ணெய் - 5 tsp

உப்பு - 1/2 tsp

செய்முறை

கடாயில்  சிறிது எண்ணெய் விட்டு சீரகம், வெந்தயம், வரமிளகாய் , தனியா சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.( நல்லெண்ணெயில் செய்தால் சுவை நன்றாக இருக்கும்)

அடுத்ததாக கடாயில் எண்ணெய் விட்டு அலசி வைத்துள்ள புளிச்சக்கீரைரையை சேர்த்து கிளறிக்கொண்டே இருங்கள். அது அப்படியே குழந்து வரும்.

அப்போது அரைத்த பொடியை சேர்த்து கிளறுங்கள். ஈரப்பதம் குறைந்து கெட்டிப்பதம் வந்ததும் மற்றொரு கடாய் வைத்து,  2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் சிறிது கடுகு சேர்த்து, அரை டேபிள் ஸ்பூன் சீரகம், அரை டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, அரை டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 வர மிளகாய் 10 பல் பூண்டு, ஒரு கொத்து கரிவேப்பிலை ஆகிய பொருட்களை சேர்த்து தாளித்து கிளறி வைத்துள்ள புளிச்சக்கீரையில் சேர்க்கவும்.

பின் கரண்டியால் நன்கு கிளறிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் புளிச்சக்கீரை தொக்கு தயார். இதை சூடான சாதத்துடன் சாப்பிட்டால் சுவை அசத்தலாக இருக்கும். 

புளிச்சக்கீரையில் உள்ள சத்துக்கள் 

புளிச்சகீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன.உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க  புளிச்சக்கீரை உதவுகிறது.
 
மேலும் படிக்க, 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!

Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!

Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்

DMK ELECTION PLAN: கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
Embed widget