![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பனிக்காலத்தில் பொடுகுத் தொல்லையா... ? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
தலைமுடியில் வேரில் படும்படி தடவி 40 நிமிடங்கள் ஊறவும். பிறகு சாதாரண ஷாம்பூ போட்டுக் குளித்தால் தலையில் பொடுகுத் தொல்லை குறையும்.
![பனிக்காலத்தில் பொடுகுத் தொல்லையா... ? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! Solutions to winter scalp dandruff with castor oil பனிக்காலத்தில் பொடுகுத் தொல்லையா... ? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/29/0f12c0a70007de67719ef79c2cc811cb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பனிக்காலத்தில் பொடுகுத் தொல்லை என்பது சர்வசாதாரணம்.ஆனால் அதற்கு மருத்துவரிடம் காண்பித்து, தனியே ஷாம்பூ உபயோகித்து என ட்ரீட்மெண்ட் செய்தாலும் தீர்வு இருக்காது.பொடுகுக்கான ஒரே தீர்வு விளக்கெண்ணெய் என்கிறார்கள் சருமவியல் நிபுணர்கள்.
ஆனால் விளக்கெண்ணெயை அப்படியே உபயோகிக்காமல் கற்றாழை தேங்காய் எண்ணெய் போன்ற மாய்ஸ்சரைஸர்களுடன் உபயோகிக்கச் சொல்கிறார்கள்.
View this post on Instagram
உபயோகிப்பது எப்படி?
கற்றாழை மற்றும் விளக்கெண்ணெய் தலைமுடிக்குப் பயன் உள்ளது. பொடுகைப் போக்கும். இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய் உடன் மூன்று தேக்கரண்டி கற்றாழைச் சோறு கலக்கவும். இதனுடன் தேவைப்பட்டால் தேயிலை மர எண்ணெய் சேர்க்கலாம். இதனை தலைமுடியில் வேரில் படும்படி தடவி 40 நிமிடங்கள் ஊறவும். பிறகு சாதாரண ஷாம்பூ போட்டுக் குளித்தால் தலையில் பொடுகுத் தொல்லை குறையும்.
iஇதனை தேங்காய் எண்ணெய் உடனும் கலந்து உபயோகிக்கலாம். இரண்டு டீ ஸ்பூன் வெங்காயச்சாற்றுடன் இரண்டு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.வேரில் இதனைத் தடவவும். முப்பது நிமிடங்கள் கழித்து ஷாம்பூ தேய்த்து தலைமுடியை அலசவும்.
ஆலிவ் எண்ணெய் உடனும் விளக்கெண்ணெய் கலந்து உபயோகிக்கலாம். அதற்கு முதலில் இரண்டு எண்ணெயிலும் ஆப்பிள் சிடார் விணீகர் கலந்து நீர்க்கச் செய்யவும். பிறகு அதனை ஒன்றாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து வைத்து. தலைமுடியில் ஸ்ப்ரே செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ தேய்த்து குளிக்கவும்.
இவற்றில் ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றுவதால் விரைவில் பொடுகுத் தொல்லை நீங்கும்.மேலும் தலைமுடி வலுவாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)