Pineapple Payasam : அன்னாசிப்பழ பாயாசம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க... இனி இதான் உங்க ஃபேவரெட்..
அசத்தலான சுவையில் அன்னாசிப்பழ பாயசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க..
பாயாசம் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் என பல வகைப் பயசங்கள் உண்டு. சிலர் வித்தியாசமான பிளேவர்களில் பாயாசத்தை சுவைக்க விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் இந்த அன்னாசிப்பழ பாயசத்தை முயற்சி செய்து பார்க்கலாம். இதன் சுவை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். அன்னாசிப்பழத்துடன் காய்ச்சிய பால், கண்டெஸ்டு மில்க் சேரும்போது அதன் சுவை அபாரமானதாக இருக்கும். வாங்க பைனாப்பிள் பாயாசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப், காய்ச்சிய பால் - 1 லிட்டர், கன்டென்ஸ்டு மில்க் - 1 கப், ஜவ்வரிசி - 1/2 கப்,
பைனாப்பிள் எசன்ஸ் - 1 தே.கரண்டி, நெய் - தேவையான அளவு, முந்திரி - தேவையான அளவு, கிஸ்மிஸ் - தேவையான அளவு
செய்முறை
1. அன்னாசி பழத்தை சுத்தம் செய்து, ஒரே அளவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
2. பின்பு ஜவ்வரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
3. அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டவுடன், ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து தண்ணீர் போகும் வரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
5. பால் கொதித்தவுடன் அதில் வெட்டி வைத்த அன்னாசி துண்டுகளை சேர்த்துக்கொதிக்க வைத்து, ஜவ்வரிசியை இதனுடன் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
பிறகு அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து சிறுது நேரம் பாயசத்தி கிளறிவிட வேண்டும்.
இறுதியாக அன்னாசி எசன்ஸ் மற்றும் நெய்யில் வறுத்தெடுத்த முந்திரியை இதனுடன் சேர்த்து எடுத்தால், சுவையான அன்னாசிப்பழ பாயாசம் தயார்.
( பாயாசம் மிகவும் கெட்டியாகாமல், குடிக்கும் பதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும்)
அன்னாசி பழத்தின் நன்மைகள்
அன்னாசிப்பழத்தில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன, குறிப்பாக வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் ப்ரோமெலைன் போன்ற நொதிகள் உள்ளன. இதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அன்னாசிப்பழத்தை இதுபோன்று ரெசிப்பிகளாகவோ அல்லது பழமாகவோ, அளவோடு சாப்பிட்டு அதன் பயன்களை பெறலாம்.
மேலும் படிக்க,