Natural Hair Dye: நரை முடி வந்துடுச்சா? கறிவேப்பிலையில் இயற்கை டை தயாரிக்கலாம்..செய்முறை இதோ!
கறிவேப்பிலையை பயன்படுத்தி எப்படி வீட்டிலேயே எளிமையான முறையில் டை தயாரிப்பது என பார்க்கலாம்.
3 பாதாம் 3 பிடி கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளவேண்டும்.கறிவேப்பிலையை தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாதாமை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் கழுவி வைத்துள்ள கறிவேப்பிலையும் சேர்த்து வறுக்க வேண்டும். கறிவேப்பிலை நன்கு மொறுமொறுப்பாக, கருப்பாக மாறும் வரை வறுக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது எடுத்துப் பார்த்தால் பாதாம் நல்ல கருப்பு நிறத்தில் மாறி இருக்கும். இவை இரண்டையும் ஆறவைக்க வேண்டும். இதற்கிடையே, மீடியம் சைஸை விட சற்று சிறிய அளவில் உள்ள இரண்டு வெங்காயத்தை வெட்டி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை வடிக்கட்டி சாறு எடுக்க வேண்டும். வடிக்கட்டிய கசடை மீண்டும் ஜாரில் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி மீண்டும் இதையும் அந்த சாறு உடன் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
பின் ஏற்கனவே ஆறவைத்த கறிவேப்பிலை மற்றும் பாதாமை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் சிறிது வெங்காய சாறை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். நன்கு மைய அரைத்து எடுத்துக் கொண்டு இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதை மிக கெட்டியாக இருந்தால் இதனுடன் சிறிது வெங்காய சாறை சேர்த்து டை பதத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இதை மூடி போட்டு இரண்டு நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும் பின் திறந்து பார்த்தால் இது இன்னும் கெட்டிப் பதத்திற்கு மாறி இருக்கும்.
இப்போது இதனுடன் இரண்டு ஸ்பூன் அவுரி பொடியை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும் மீண்டு இதை டை பதத்திற்கு மாற்ற இதனுடன் சிறிது வெங்காய சாறை சேர்க்க வேண்டும். இதனை ஸ்பூன் வைத்து நன்கு மிக்ஸ் செய்தால் இயற்கை டை தயாராகி விடும். இப்போது இதை தலையில் தேய்க்க வேண்டும். தலையில் டை தேய்க்கும் போது முடியில் எண்ணெய் இருக்க கூடாது அப்படி இருந்தால் தலையில் டை ஒட்டாது. தலையில் டை அப்ளை செய்த இரண்டு மணி நேரத்திற்கு பின் முடியை தண்ணீரில் அலச வேண்டும். இப்போது உங்கள் முடி கரு கருவென மாறி இருக்கும்.