Video Peacock Mesmerizing : இப்படி ஒரு மயிலை பாத்திருக்கவே மாட்டீங்க.... ட்விட்டரில் களைகட்டும் வைரல் வீடியோ
தோகை இளமயில் ஆடுவதை யாரால் ரசிக்காமல் இருக்க முடியும். அப்படியொரு வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இணையத்தில் அன்றாடம் ஏதாவது ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் மனதை வருடும் நிகழ்வுகள், சில நேரங்களில் மனதை நெகிழச் செய்யும் தருணங்கள், இன்னும் சில நேரங்களில் மனதை பதறவைக்கும் சம்பவங்கள். தோகை இளமயில் ஆடுவதை யாரால் ரசிக்காமல் இருக்க முடியும். அப்படியொரு வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ட்விட்டரில் அப்படியொரு வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. பிட்டன்ஜேபிடென் என்ற பெயரில் ஒரு நபர் தோகை மயிலின் வீடியோவைப் பதிவேற்றி இணையத்தில் அனைவரையும் மகிழ்வித்துள்ளார். அந்த மயில் பறக்கும் போது அதில் உள்ள ஊதா நிறமும், பச்சை நிறமும் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
Ever seen a flying peacock? pic.twitter.com/3W3Mafw0DH
— Buitengebieden (@buitengebieden) June 20, 2022
மயில் கூரை ஏறி பாயும் என்று மட்டும் தான் நாம் நினைத்து வைத்திருக்கிறோம். ஆனால் மயில் நீண்ட நெடுந்தூரம் பறக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனாலேயே இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ஒருவர் இவ்வாறாக எழுதியுள்ளார்.
நான் ஒருமுறை ஒரு விலங்கியல் பூங்காவில் மயில் கூட்டத்தைப் பார்த்தேன். அவை எல்லா இடங்களிலும் அழகாக நடந்தன. அது ஒய்யாரமாக இருந்தது. அவற்றின் நீளமான தோகையைப் பார்த்து நான் அசந்துவிட்டேன். அவற்றில் அகவலைக் கேட்டு வியந்தேன். ஆனால் இந்த மயில் பறப்பதை பார்த்து இன்னும் இன்னும் பேரின்பத்தில் ஆச்சர்யத்தில் உள்ளேன் என்றார்.