Manihot Esculenta Puttu: கேரளா ஸ்டைலில் சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டு.. அசத்தலாக செய்வது இப்படித்தான்..!
கேரளா ஸ்டைலில் சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டு ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
![Manihot Esculenta Puttu: கேரளா ஸ்டைலில் சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டு.. அசத்தலாக செய்வது இப்படித்தான்..! Manihot esculenta puttu recipe procedure know how to cook Manihot Esculenta Puttu: கேரளா ஸ்டைலில் சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டு.. அசத்தலாக செய்வது இப்படித்தான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/21/51344396a0f6e324dc4c816bb4bff4591692621875893571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேவையான பொருட்கள்
மரவள்ளிக் கிழங்கு - அரை கிலோ
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு அதனை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் துருவிய மரவள்ளிக்கிழங்கை போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். அதை 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். பின் அதனை பிழிந்து, அதிலுள்ள பாலை வெளியேற்றி விட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். புட்டு குழலை எடுத்துக் கொண்டு, அதனுள் சிறிய ஓட்டையுள்ள தட்டை வைத்து, முதலில் சிறிது துருவிய தேங்காயைப் போட்டு, பின் சிறிது துருவிய மரவள்ளிக் கிழங்கை போட்டு, அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறிது தேங்காய், மரவள்ளிக் கிழங்கு என அடுத்தடுத்து சேர்த்து குழலை நிரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த குழலை புட்டு பாத்திரத்துடன் இணைத்து, 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெடி.
மரவள்ளிக்கிழங்கின் நன்மைகள்
மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. மரவள்ளிக்கிழங்கு மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும் என கூறப்படுகிறது.
இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கும் என கூறப்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ,ரத்த சோகையை கட்டுப்படுத்தும் என சொல்லப்படுகிறது. அதிக நார்சத்து இருப்பதால் எளிதில் சீரணமாக உதவும் என்றும் கூறப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள புரத சத்தும், வைட்டமின் கேவும், எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குவதாக சொல்லப்படுகின்றது.
இதிலிருந்து தயாரிக்கப்படும் முக்கிய மாவுப் பொருள் ஜவ்வரிசி. இது கஞ்சி, பாயசம் செய்ய உதவும். இக்கஞ்சி வயிற்று புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கை சமையலில், சாம்பாரில் சேர்க்கலாம். மரவள்ளிக்கிழங்கை அளவாக சாப்பிட்டு அதன் நன்மைகளை பெறலாம்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.
மேலும் படிக்க
Crime: "தண்ணி வேணுமா.. இந்தா சிறுநீரை குடி.." பட்டியலின இளைஞரை தாக்கி அராஜகம் செய்த போலீஸ் எஸ்.ஐ..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)