Mango Thickshake: மாம்பழ சீசன் வந்தாச்சா? திக்ஷேக் செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!
Mango Thickshake: மாம்பழ மில்க்ஷேக் செய்வது எப்படி என்பது குறித்து காணலாம்.
மாம்பழம்னு சொன்னாலே போதும் எல்லாருக்கும் ஃபேவரைட். கோடை காலம் வெயிலுக்கு மட்டுமா ஃபேமஸ் மாம்பழத்திற்குதான் ரொம்ப பேமஸ். இந்த சீசன்ல தான் நல்ல சுவையான மாம்பழங்கள் வகை வகையா கிடைக்கும். மாம்பழ சீசன் என்றாலே எல்லாருக்கும் குஷியாகிடும். நிறைய டிஷ் செய்யலாம். மாம்பழம் திக்ஷேக் செய்வது எப்படி என்று காணலாம்.
என்னென்ன தேவை?
மாம்பழம் - 2
தேங்காய் பால் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
சியா விதைகள் - ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை
மாம்பழம், தேங்காய் பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தேவையெனில், கன்டன்ஸ் மில்க் அல்லது தேன் சேர்க்கலாம். இதோடு சியா விதைகள் சேத்தால் ரெடி. மாம்பழ திக்ஷேக்.
மாம்பழ மில்க்ஷேக்
நல்ல பழுத்த மாம்பழம் ஒன்றை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனோடு பொடித்த சர்க்கரை 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். ஹெல்த்தியாக சாப்பிட விரும்புபவர்கள் சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்து கொள்ளலாம். இந்த கலவையை லேசாக மசித்து கொள்ளவும். 5 - 10 நிமிடங்கள் வரை முடி வைக்கவும். இந்த கலவையை ஒரு கிளாஸ் டம்பளரில் மாற்றி கொள்ளவும். அதனோடு ஐஸ் கியூப்ஸ் சேர்த்து சிறிது வெட்டிய மாம்பழ துண்டுகளையும், குளிர்ந்த பால் கலந்து பரிமாறவும். கொரியன் மேங்கோ ஷேக் ரெடி. இந்த ட்ரின்க் உடம்பில் இருக்கும் வெப்பத்தை தணிக்கும்.
மாம்பழ ஜெல்லி
என்னென்ன தேவை
தண்ணீர் - 3/4 கப்
அரைத்த மாம்பழம் விழுது - 1/2 கப்
அகர் -அகர் - 3 கிராம்
சர்க்கரை - டேபிள் ஸ்பூன்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் அகர் அகர் சேர்த்து, நன்றாக கலக்கவும். அதாவது, குறைந்த வெப்ப நிலையில், அகர் அகர் முழுவதுமாக தண்ணீரில் கரையும் வரை கிளறவும்.
- மாம்பழத்தை சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். மாம்பழத்தை அரைக்கும் போது அதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- அகர் அகர் முழுவதுமாக கரைந்த பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்கவும். பின் அதில் இந்த அரைத்த மாம்பழத்தை சேர்க்கவும்.
- இரண்டையும், நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் அதை கேக் தயாரிக்கும் டின், அல்லது சாக்லேட் மோல்டில் ஊற்றி 15 நிமிடங்கள் பிரிட்ஜ்ல் வைக்கவும்.
- பின்னர் எடுத்து பிடித்த வடிவங்களில் வெட்டி பரிமாறலாம். மாம்பழ ஜெல்லி ரெடி!
அல்போன்சா மாம்பழங்கள் ஜெல்லிக்கு தனி சுவையை தருகிறது. ஐஸ்கிரீம் உடன் சேர்த்து சாப்பிடுவது, ருசியை இரட்டிப்பாக்கித் தரும்.
குழந்தைகளுக்கு இது போன்று ஒவ்வொரு பழங்களையும் அறிமுகப்படுத்தலாம். இதில் மாம்பழங்களுக்கு பதில் ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி என எந்த பழங்களை வேண்டுமானாலும் சேர்த்து ஜெல்லி செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.