Watch Video:என்னது வெண்டைக்காயில் ஐஸ்க்ரீம் செய்யலாமா? வைரலாகும் வீடியோ!
Watch Video: வெண்டைக்காய் ஐஸ்க்ரீம் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாவது குறித்து இங்கே காணலாம்.
வெண்டைக்காய் ஐஸ்க்ரீம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் என்ற ஃபார்மெட் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அதில் உணவு, சமையல் குறிப்புகள், ப்யூட்டி குறிப்புகள், Vlog உள்ளிட்ட பல்வேறு வகையான வீடியோக்கள் கிடைக்கும். காமெடி, பொழுதுபோக்கு உள்ளிட்ட வீடியோக்கள் கிடைக்கும். இவற்றிற்கு பல்வேறு விமர்சனங்களும் கமெண்ட்களில் கிடைக்கும்.
இப்போது வெண்டைக்காய் வைத்து ஐஸ்க்ரீம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வெண்டைக்காய் வைத்து யாராவது ஐஸ்க்ரீம் செய்வார்களா என்று கேட்டால் ஸ்டீபன் என்கோ என்பவர் அதை செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் ஆச்சரியத்துடனும் வேதனையுடனும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பச்சை நிறத்தில் இருக்கும் ஐஸ்க்ரீம் வெண்டைக்காய், எலிமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றை வைத்து கோன் ஐஸ்க்ரீம் செய்துள்ளார்.
View this post on Instagram
வெண்டைக்காயில் உள்ள விதைகளை தனியாக நீக்கி அதை ஆரஞ்சு, எலுமிச்சை பழத்துடன் சேர்த்து அரைத்து தனியே வைக்கிறார். ஐஸ்க்ரீம் செய்ய வெண்ணெய், மாவு, உள்ளிட்டவற்றை கொண்டு waffle cone தயாரிக்கிறார். இதில் வெண்டைக்காய் ஐஸ்க்ரீம் வைத்து சாப்பிடுகிறார். இந்த வீடியோ 2.4 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளது.
இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெண்டைக்காய் ஃப்ரை செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். ஆனால், அதை இப்படி வீணடித்துவிட்டீர்களே என்று ஒருவர் கமெண்ட் தெரிவித்துள்ளார்.
இன்னொருவர்,” இவருடைய வீடியோக்களை நான் ஃபாலோ செய்து வருகிறேன். வெண்டைக்காய் வைத்து ஐஸ்க்ரீம் தயாரித்துள்ளார். க்ரியேட்டிவ் ஐடியா இது.” என்று கமெண்ட் செய்துள்ளார்.
வெண்டைக்காயில் வழவழப்பு தன்மை இருக்கும்; அதை வைத்து ஐஸ்க்ரீம் செய்ததை பாராட்டலாம்,” என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து மிகுந்த வெண்டைக்காய் வைத்து ஃப்ரை, புளிகுழம்பு, பக்கோடா, துவையல் உள்ளிட்டவற்றை செய்யலாம். ஆனால், வெண்டைக்காய் ஐஸ்க்ரீம் சுவை எப்படியிருக்கும் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.