Kitchen Tips:ஃப்ரிட்ஜே இல்லாமல் காய்கறிகள் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமா? இன்னும் பல பயனுள்ள குறிப்புகள்!!
பயனுள்ள எளிமையான கிட்சன் குறிப்புகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
தேங்காய் கெடாமல் இருக்க
தேங்காய் கெடாமல் இருக்க வேண்டுமென்றால் அதன் குடுமி பகுதி மேல் பகுதியில் இருக்குமாறு வைக்க வேண்டும். இப்படி வைத்தால் தேங்காய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
உடைத்த தேங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க
உடைத்த தேங்காய் கெடாமல் இருக்க வேண்டுமென்றால் தேங்காயின் உள்பகுதியை காட்டன் துணி வைத்து ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும். பின் கைகளையும் ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும். இப்போது தூள் உப்பை எடுத்து தேங்காயில் உள்புறம் தூவி விட வேண்டும். இப்போது இந்த தேங்காயை காட்டன் துணியில் சுற்றி வைக்கவும். அல்லது டப்பாவில் போட்டு மூடி வைக்கலாம். இப்படி வைத்தால் உடைத்த தேங்காய் ஒரு வாரம் வரையில் கெடாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க
முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என கூறப்படுகிறது. உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் முளை விடாமல், சுருங்கி போகாமல் இருக்க வேண்டும் என்றால், காலியான ஒரு அட்டைப் பெட்டியை எடுத்துக் கொள்ளவும். இதன் அடியில் ஒரு நியூஸ் பேப்பரை போட்டு அதன் மீது உருளைக்கிழங்கை போட்டு வைக்க வேண்டும். இப்போது அட்டை பெட்டியை பாதி அளவு மூடி வைக்க வேண்டும். முழுவதுமாக மூட கூடாது. இப்படி வைத்தால் இரண்டு வாரம் வரை உருளைக்கிழங்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
பூண்டு கெடாமல் இருக்க
பூண்டு முழு பூண்டாக வைத்தால் நீண்ட நாட்கள் வராது. எனவே பூண்டை தனி தனி பற்களாக பிரித்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். இப்படி வைத்தால் பூண்டு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
முருங்கைக்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க
முருங்கை காய்களை ஃப்ரிட்ஜ் இல்லாதவர்கள் எப்படி ஸ்டோர் செய்து வைக்க வேண்டும் என்று பார்க்கலாம். முருங்கை காய்களை முழுவதுமாக அல்லது பாதி பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து கொள்ள வேண்டும். பின் முருங்கை காயை துணியினுள் வைத்து அனைத்துப் பக்கங்களிலும் நன்றாக சுற்றி மூடிக் கொள்ள வேண்டும். இதை கிச்சனில் ஒரு ஓரமாக அப்படி வைத்து விடலாம். இப்படி வைத்தால் 4 நாட்கள் வரை முருங்கை காய் காய்ந்து போகாமல் இருக்கும்.
மேலும் படிக்க
World Water Day 2024: இன்று, உலக தண்ணீர் தினம்! நீர் மேலாண்மையை துரிதப்படுத்த ஐ.நா. அறிவுரை!